India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 9ஆவது தளத்தில் ஏற்பட்ட தீயை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீ விபத்தில் மாயமான இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. குடியிருப்பில் சிக்கித் தவித்த 15 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. நேற்று நடைபெற்ற 2ஆவது டி20 போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 12.1 ஓவரில் 92/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பிரமோஸ் ஏவுகணையை குறிப்பிட்டு காங்கிரஸ் ஆட்சியில் இதனை நாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா? என பிரதமர் மோடி வினவியுள்ளார். பெங்களூருவில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், ‘நேற்று இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பிலிப்பைன்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறையப்பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தனது ஆட்சியில் HAL நிறுவனம் உற்பத்தியில், லாபம் ஈட்டுவதில் புதிய சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

➤ 1526 – டெல்லியின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி முதலாவது பானிபட் போரில் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார். ➤ 1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. ➤ 1960 – பிரேசிலியா பிரேசில் நாட்டின் தலைநகராக ஆக்கப்பட்டது. ➤1964 – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைந்தார் ➤ 2019 – கொழும்புவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர்.

கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு புறநகர் தொகுதியில் போட்டியிடும் தனது சகோதரர் சுரேஷ்க்கு ஆதரவாக பிரசாரம் செய்த சிவக்குமார், பல்வேறு உத்தரவாதங்களை அளித்துள்ளார். காங்கிரஸுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியடையச் செய்யும் உணவுகளை எடுத்து கொள்வதோடு, உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம். அந்த வகையில், அதிகப்படியான டீ, காபி கார்பனேட்டடு குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது. எந்த பானம் பருகுவதாக இருந்தாலும், ஐஸ்கட்டிகளை தவிர்த்துவிடுங்கள். சீசன் பழங்களான மாம்பழம், பலா போன்ற பழங்களை அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரை பருகலாம்.

தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் அளிக்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலந்திருந்ததாக நீதிமன்றத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரானின் முறையீட்டை தொடர்ந்து, இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 8 ▶குறள்: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. ▶பொருள்: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

அமெரிக்காவில் டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. டிக் டோக் மூலம் பயனர்களின் தரவுகளை சீனாவின் Byte Dance நிறுவனம் பயன்படுத்தலாமென அச்சம் நிலவுகிறது. இப்புதிய மசோதாவின்படி, ஓராண்டுக்குள் சீன உரிமையாளர் டிக் டோக் பங்குகளை விற்காவிடில் டிக் டோக் செயலிக்கு தடை விதிக்கப்படும். இதனை,சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக Byte dance நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவின் திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிப்பெற்றால் அதிக மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி முதல் அண்ணாமலை வரை பலர் மீதும் கடுமையாக விமர்சிக்கும் அவர், தனது X பக்கத்தில், ‘பிற பாஜக வேட்பாளர்கள் எனக்கு பரிச்சயமானவர்கள் இல்லை. எனவே, அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதே நல்லது’ என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.