India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சத்தீஸ்கரில் ஆயுதமின்றி இருந்த 17 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 16ஆம் தேதி 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மாவோயிஸ்ட் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுதமின்றி காயம்பட்டு கிடந்த 17 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை காவல்துறை மறுத்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது. அதனால், இறுதித் தகவலில் வேறுபாடு ஏற்பட்டதாகவும், குளறுபடி எதுவும் நடைபெறவில்லை எனவும் விளக்கமளித்தார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கை பார்த்து, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்குடன் நெட்டிசன்கள் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். 2024 ஐபிஎல் சீசனில், சன் ரைசர்ஸ் அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பேட்டிங்கில் அசத்தி வருகிறது. 20 ஓவர்களில் 250 ரன்களுக்கும் மேல் சாதாரணமாக குவிக்கிறது. இதை கண்ட நெட்டிசன்கள், அந்த அணியை ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து தராமல், கொல்ல சதி நடப்பதாக ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தது. இந்நிலையில், திகார் சிறை நிர்வாகம் டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவுக்கு அனுப்பிய மருத்துவ அறிக்கையில், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையிருப்பதாக ஆர்.எம்.எல் மருத்துவர்கள் கூறவில்லை. மேலும், மாத்திரைகள் எடுத்து கொண்டால் போதுமானதென அறிவுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் அங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இதனிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன், கடந்த 5 ஆண்டுகளாக ராகுல் தொகுதிக்கு வருவது இல்லை என்றும் தன்னுடனே அவர் தொடர்பில் இல்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக ஆடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவில் மலர்களால் மணப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (ஏப்.22) தேரோட்டமும், ஏப்.23ஆம் தேதி அதிகாலையில் வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதே போன்று, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. ஃபிளே ஆப் சுற்றுக்கு முன்னேற, இரு அணி வீரர்களும் தங்களது முழு பலத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

காஸாவின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 6 சிறார்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். அகதிகள் முகாம்கள், மருத்துவமனை பணியாளர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதை சர்வதேச மனித உரிமை மீறல் எனவும், இதனை உடனடியாக தலையிட்டு ஐ.நா அமைப்புகள் கண்டிக்க வேண்டுமென பாலஸ்தீனிய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

▶ஏப்ரல் – 21 | ▶ சித்திரை – 08 ▶கிழமை: ஞாயிறு | ▶திதி: திரயோதசி ▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 03:30 – 04:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 01:30 – 02:30 வரை ▶ராகு காலம்: காலை 04:30 – 06:00 வரை ▶எமகண்டம்: பிற்பகல் 12:30 – 01:30 வரை ▶குளிகை: காலை 03:00 – 04:30 வரை ▶சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம் ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அரிய வகை விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி வரும், ஏப்.29 முதல் மே 1ம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி, முக்கூர்த்தி தேசிய பூங்கா முதல் கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் வரையிலான, மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள வரையாடுகளின், 140 வாழ்விடங்களில் கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.