India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகிலேயே தோனி தான் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் என்று இந்திய முன்னாள் வீரர் பாலாஜி தெரிவித்துள்ளார். தோனியின் அதிரடி முன்பு யாரும் நெருங்க முடியாது என்ற அவர், இந்த ஐபிஎல் போட்டிகளில் அவர் அளவுக்கு ஸ்ட்ரைக் ரேட் யாரிடமும் இல்லை என்றும் தெரிவித்தார். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள தோனி 260 ஸ்ட்ரைக் ரேட்டில் 91 ரன்கள் எடுத்துள்ளார். 8 ஃபோர் மற்றும் 8 சிக்ஸ் அடித்துள்ளார்.

2ஆம் கட்ட தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை அளிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். “2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றமளிக்கப் போகிறது. அரசின் நல்லாட்சியை வாக்காளர்கள் விரும்புகிறார்கள். இளைஞர்களும், பெண்களும் வலுவான ஆதரவை தந்துள்ளனர்” என X-இல் அவர் பதிவிட்டுள்ளார்.

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் PBKS அணி வீரர் ஃபேர்ஸ்டோ ருத்ர தாண்டவம் ஆடினார். 262 ரன்கள் இலக்கை துரத்தி வரும் PBKS அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிராப்சிம்ரன் மற்றும் பேர்ஸ்டோ, KKR வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளினர். குறிப்பாக இம்பேக்ட் பிளேயர் அனுகுல் ராய் வீசிய 6ஆவது ஓவரை எதிர்கொண்ட ஃபேர்ஸ்டோ 4, 6, 4, 4, 6 என ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார்.

இரவு உணவை தாமதமாகச் சாப்பிடும் வழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. பெரும்பாலானோர் இரவு 9 மணிக்குப் பிறகே சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு, 9 மணிக்குள் உறங்கச் சென்றால் செரிமானம் சீராக இருக்கும் என உணவியலாளர்கள் கூறுகின்றனர். அதே போல, நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய்ப் பாதிப்புக் கொண்டவர்கள் இரவு உணவைக் குறைவாகச் சாப்பிட வேண்டும்.

மே 1ஆம் தேதி முதல் தனியார் முன்னணி வங்கிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள்.
*ICICI வங்கியின் சேமிப்புக் கணக்குக்கான சேவைக் கட்டணம் மாறுகிறது.
*ICICI டெபிட் கார்டுக்கான ஆண்டு சேவைக் கட்டணம் நகரங்களில் ₹200, கிராமங்களில் ₹99ஆக மாற உள்ளன. *YES வங்கி தனது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள சேமிப்புக் கணக்கிற்கான சேவைக் கட்டணத்தை மாற்றி அமைக்க உள்ளது.
*IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு சேவைக் கட்டணம் மாறுகிறது.

உலகக் கோப்பை டி20 தூதராக யுவராஜ் சிங்கை ஐசிசி அறிவித்துள்ளது. முதல் டி20 உலகக் கோப்பையில் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த யுவராஜ் சிங், 2007இல் டி20 மற்றும் 2011இல் 50 ஓவர் உலக் கோப்பையை இந்தியா வாங்குவதற்கு காரணமாக இருந்தார். உசேன் போல்ட், கிறிஸ் கெயில் ஆகியோருடன் யுவராஜ் சிங்கும் இந்தப் போட்டியின் தூதராக
அறிவிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை டி20 போட்டி ஜூன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 261 ரன் எடுத்துள்ளது. முதலில் விளையாடி துவங்கிய கொல்கத்தா அணியின். சுனில் நரைன் மற்றும் சால்ட் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். நரேன் 71, சால்ட் 75 மற்றும் வெங்கடேஷ் ஐயர் 39 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர் நிறைவடைந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 261 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

‘கில்லி’ படத்தின் ரீரிலீஸுக்கு கிடைத்த வரவேற்பு பல வெற்றி படங்களை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை உருவாகியுள்ளது. அந்த வகையில், கமல்ஹாசனின் ‘இந்தியன்’ படத்தை ரீரிலீஸ் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜூன் மாதம் இப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், மே மாதத்தில் முதல் பாகத்தை வெளியிட ஸ்ரீ சூர்யா மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தால் மக்களிடையே சர்க்கரை நுகர்வு அதிகரித்து வருகிறது. இதனால், அதன் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4.9% வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில், விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதத்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு 2 லட்சம் டன் அதிகரித்து, 23 லட்சம் டன்னில் இருந்து 25 லட்சம் டன்னாக உயர்த்தியுள்ளது.

சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் 4.5% உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், பழச்சாறுகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதன் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை மளமளவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சில்லரை விலையில் சர்க்கரை கிலோ ₹50 தாண்டியுள்ளது. வரும் நாட்களில் தேவைக்கேற்ப விலை உயரும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.