India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு செல்வதாக வெளியான தகவல் மிகவும் தவறானது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 39 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சில இடங்களில் திமுகவுக்கு வாக்குச்சதவீதம் மாறுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதால், அவர் மாலத்தீவு செல்லவில்லை என தெரிகிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும், முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். பேருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் புதிய பேருந்துகள், காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கை, பராமரிப்பில் உள்ள பேருந்துகள் குறித்து ஆய்வு செய்ய அவர் அறிவுறுத்தினார்.

இந்தியாவை சுமார் 200 வருடங்கள் ஆட்சி செய்த இங்கிலாந்தை விடவும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேறியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பரப்புரையில் பேசிய அவர், முன்னணி நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வரும்போது, இந்தியா மட்டும் பிரகாசமான நட்சத்திரத்தைப் போல் முன்னேறி வருவதாக கூறினார். மோடி மீண்டும் பிரதமரானால் 3ஆவது பெரும் பொருளாதார நாடாக உயருவோம் எனவும் தெரிவித்தார்.

அபிஷேக் ஷர்மா இன்னும் ஆறு மாதத்தில் இந்திய அணிக்காக விளையாட தயாராகிவிடுவார் என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். பவர்பிளேவில் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் அவரிடம் இருப்பதாகக் கூறிய யுவராஜ், இருப்பினும் இன்னும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை என்றார். மேலும், அவர் சரியான பயிற்சியை மேற்கொள்ளும் பட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு மத்தியில் எளிதாக விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்களிக்கவும் ஐகோர்ட்டில் அவர் வழக்குத் தொடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததால், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, கைது செய்ய போலீஸ் களமிறங்கியுள்ளது.

இவிஎம் வாக்குகள், விவிபேட் சீட்டுகளை 100% ஒப்பிட உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், அந்த வழக்குகளுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அந்த வழக்குகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ காங்கிரஸ் தொடுக்கவில்லை, அதேநேரத்தில் விவிபேட் சீட்டை அதிக எண்ணிக்கையில் ஒப்பிடக்கோரி காங்கிரஸ் போராடும் என்றும் அவர் கூறினார்.

சிபிஐ-க்குள் அதிகாரத்தையும் பதவியையும் கைப்பற்றுவதற்கான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் அக்கட்சியின் மாநில மாநாட்டில், புதிய செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதன் காரணமாக மாநிலச் செயலாளர் முத்தரசன் & மூத்த தலைவர் சுப்பராயன் ஆகிய இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே உச்சக்கட்ட பனிப்போர் நடப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு என்ற பிரசாரத்துடன் மக்களவைத் தேர்தலை நடத்தி வருகிறது. இதில் நேற்று உ.பி.,யில் 8 தொகுதிகளுக்கு நடந்த 2ஆம் கட்டத் தேர்தலில் 54.85% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அம்ரோகாவில் 64.02%, மிகவும் குறைந்தபட்சமாக நடிகை ஹேமமாலினி களமிறங்கிய மதுராவில் 49.29% (50%க்கும் கீழ்) வாக்குகள் பதிவாகியுள்ளது.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, 6, 7, 8ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 6, 7ஆம் வகுப்புகளுக்கு 3ஆம் பருவ தேர்வு மதிப்பெண், கிரேடுகளை பதியுமாறும், 8ஆம் வகுப்புக்கு முழு ஆண்டு மதிப்பெண்களை பதியுமாறும் கூறப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து ஆசிரியர் குழு ஒப்புதலுடன் முடிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் – சிபிஎம் இடையே நடந்துவரும் வார்த்தை மோதல் நெருடலைத் தந்திருப்பது உண்மைதான் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “வயநாட்டுக்கு ஆனி ராஜாதான் புதியவரே தவிர, ராகுல் அல்ல. கடந்த தேர்தலில், கேரளாவின் 20 தொகுதிகளில் 19இல் வென்றோம். இம்முறையும் பெரிய வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.