news

News April 27, 2024

அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

image

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, அன்றாடம் முறையான குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

News April 27, 2024

தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளார் மோடி

image

பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மோடி அரசு வஞ்சனை செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத புயல், வெள்ளத்தால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறியும் பலனில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், குஜராத்துக்கு ஆயிரம் கோடி நிதி கொடுத்த மோடி, தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளதாக அவர் சாடினார்.

News April 27, 2024

சர்ச்சையில் சிக்கியதால், திமுகவில் இருந்து நீக்கம்

image

ஆளும் திமுகவை சேர்ந்த போஸ், தென்காசியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து பல பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார். நேற்று அவரின் காரில் கடத்திச் செல்லப்பட்ட 440 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்விவகாரத்தை டிடிவி உள்ளிட்டோர் அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள நிலையில், போஸ் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.

News April 27, 2024

சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை தவிர்த்த டாடா

image

ஆப்பிள் நிறுவன செல்ஃபோன்களை அசெம்பிள் செய்ய அதீத திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை டாடா நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் டாடா நிறுவன கிளையில் வைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, அசெம்பிளிங் இயந்திரங்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனை டாடா நிறுவனம் தவிர்த்துள்ளது.

News April 27, 2024

மாலத்தீவில் சீன உளவுக் கப்பல்

image

சீன உளவுக் கப்பல் 2 மாதங்களுக்கு பிறகு மாலத்தீவுக்கு மீண்டும் வந்துள்ளது. மாலத்தீவு அதிபராக மொய்சூ பதவியேற்ற பிறகு, அந்நாடு இந்தியாவின் போட்டி நாடான சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. மாலத்தீவுக்கு பிப்ரவரி மாதம் சீனாவின் சியாங் யாங் ஹாங் 3 என்ற கப்பல் வந்து ஒரு வாரம் முகாமிட்டிருந்தது. பிறகு திரும்பிச் சென்ற அக்கப்பல், 25ஆம் தேதி மீண்டும் வந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

News April 27, 2024

இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் நேரத்தை குறைப்பது தான்

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க, டாஸ்மாக் கடைகளை குறைப்பது மட்டுமல்லாமல், நேரத்தையும் குறைப்பது தான் “ஒரே தீர்வு” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News April 27, 2024

தமிழகத்திற்கு ஓரவஞ்சனை காட்டும் மத்திய அரசு

image

தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ₹38,000 கோடி கேட்கப்பட்ட நிலையில், ₹276 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என விமர்சித்தார். தமிழகத்தை ஓரவஞ்சனையுடன் பார்க்கும் மத்திய அரசு, யானை பசிக்கு சோளப்பொரிபோல நிதி ஒதுக்கியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், நிதி பகிர்வு சீராக இல்லை எனவும் சாடினார்.

News April 27, 2024

மத்திய அரசு மீது இபிஎஸ் குற்றச்சாட்டு

image

மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு கர்நாடகாவை விட ரூ.3000 கோடிக்கு மேல் மத்திய அரசு குறைத்து வழங்கியுள்ளது. இதுகுறித்து பேசிய இபிஎஸ், தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியைவிட குறைந்த அளவு நிதியையே அளிக்கும் எனக் குற்றம் சாட்டிய அவர், திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என விமர்சித்தார்.

News April 27, 2024

தேர்தலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்காத காங். கூட்டணி

image

மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட இஸ்லாமியர்களை வேட்பாளர்களாக காங்கிரஸ் கூட்டணி நிறுத்தவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவில் இருந்து மூத்த தலைவர் ஆரிஃப் கான் விலகியுள்ளார். மேலும் கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்லாமியர்களின் வாக்குகள் வேண்டும், ஆனால் அவர்களை வேட்பாளர்களாக நிறுத்த மாட்டீர்களா என மக்கள் கேட்பதாக தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

இந்திய சந்தைக்கு வந்த BMW செடான் ஐ-5

image

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான BMW , ஐ-5 எலக்ட்ரிக் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 205 கிலோவாட் சார்ஜர் மூலம் காரின் பேட்டரியை அரை மணி நேரத்திற்குள் 80% சார்ஜ் செய்துவிட முடியுமாம். 3.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 516 கிமீ பயணிக்க முடியும். இதில் 360 டிகிரி கேமரா & டச் ஸ்கிரீன் டிஸ்பிளே உள்ளது. இதன் விலை ரூ.1.20 கோடியாகும்.

error: Content is protected !!