India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள், +2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு www.unom.ac.in இணையத்தளத்தை அணுகவும்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து LSG இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளும் 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 7 வெற்றிகள் பெற்றுள்ள RR முதல் இடத்திலும், 5 வெற்றிகள் பெற்றுள்ள LSG 4ஆவது இடத்திலும் உள்ளது. முன்னதாக மார்ச் 24இல் நடைபெற்ற போட்டியில் RR வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

‘கல்கி 2898 கி.பி’ படம் ஜூன் 27இல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபாஸ் – நாக் அஸ்வின் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அமிதாப், கமல், பிரபாஸ், திஷா பதானி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இந்தப் படம், முதலில் மே 9ஆம் தேதி வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியா 3 தங்கம் வென்றுள்ளது. ஜோதி சுரேகா, அதிதி, பர்ணீத் உள்ளிட்ட மகளிர் அணியினர் இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர். அபிஷேக், பிரயன்ஷ், பிரதமேஷ் உள்ளிட்ட ஆடவர் அணி நெதர்லாந்தை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தினர். மேலும், கலப்பு அணி பிரிவில் அபிஷேக், ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் சேர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 31ஆவது வயதில் அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளராகப் பணியில் சேர்ந்த அவர், கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு, கூகுள்+, மேப்ஸ், கூகுள் ஆட்ஸ், கூகுள் சர்ச் உள்ளிட்ட பல முக்கியத் திட்டங்களில் பங்கு வகித்துள்ளார். இந்தியரான இவர், 2015ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

விஜய் சேதுபதியின் சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012இல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக, விஜய், ரஜினி உள்ளிட்டோரின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் விலை மதிக்க முடியாத உயிர்கள் பறிபோவதைத் தமிழக அரசு வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். மக்கள் மீது அக்கறை இல்லாமல் முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அவர், தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை பெற்று மக்களைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது எனக் கூறி மத்திய அரசு வஞ்சிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரணமாக ₹37,907 கோடி வழங்கக் கோரிய நிலையில், நீதிமன்றத்தை நாடிய பிறகு ₹276கோடி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்

வெயில் காலத்தில் பீர் குடிப்பது உடல் சூட்டைத் தணிக்கும் என்ற வாதத்தைப் பலர் முன் வைக்கின்றனர். ஆனால், இது தவறான புரிதல் என்கிறார்கள் கல்லீரல் மற்றும் குடல் சிகிச்சை மருத்துவர்கள். பீர் உள்ளிட்ட மதுபானங்களில் ஆல்கஹால் இருப்பதால், குளிர்ச்சியாகப் பருகினாலும், அறை வெப்பநிலையில் பருகினாலும் உடலுக்குக் கேடு தரும் எனக் கூறுகின்றனர். பீர் குளிர்ச்சி தரும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையாம்.

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டத் தேர்தல்களில் பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். முதல் இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என பாஜகவினரே கூறுவதாக விமர்சித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.