India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள், எலான் மஸ்கிற்கு எதிராகவே திரும்பியுள்ளன. டிரம்புக்கு போட்டியாக, USA இறக்குமதிகளுக்கு மற்ற நாடுகளும் அதிகம் வரி விதிக்க தொடங்கினால், அது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டெஸ்லா EV கார்களின் உற்பத்தி விலை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்வது கடினமாகும் என அந்நிறுவனம், டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும். தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணாக்கர்கள் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிபிஎஸ்இயின் இந்த முடிவால் மாணவர்கள் அனைவரும் பயனடைவர் எனக் கூறப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.
மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர். அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகாேதரி ஆவார்.
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 1 கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்தது. பின்னர் மாலை ரூ.70 அதிகரித்தது. அதாவது, 1 கிராம் விலை இன்று ஒரே நாளில் ரூ.180 உயர்ந்தது. இதையடுத்து, 1 கிராம் தங்கம் ரூ.8,300ஆகவும், சவரன் ரூ.66,400ஆகவும் விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தாண்டியது, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் யாவும் போலித்தனமாக இருப்பதாகவும், அவை எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் என்னவானது? ரேஷனில் கூடுதல் சர்க்கரை அறிவிப்பு என்னவானது? பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது என விஜய் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட <<15757548>>EL விடுப்பு பணம்<<>> பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது. *சென்னையில் ₹110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு. *அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ₹1 கோடி விபத்து காப்பீடு.*அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக ₹5 லட்சம் வங்கி நிதியுதவி.*பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக ₹10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளதை காட்டுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரசின் கடனும், ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகளும் உயர்ந்துள்ளதாக சாடிய அவர், திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.