India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகக் கோப்பை வில்வித்தை தொடரில் இந்திய வீராங்கனை ஜோதி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். சீனாவில் நடந்த மகளிர் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு போட்டியின் இறுதிச் சுற்றில் ஜோதி, அதிதி, பர்னீத் கூட்டணி 236-225 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தி, தங்கம் வென்றது. அதே போல கலப்பு அணி & மகளிர் தனிநபர் ஆகிய இரு பிரிவுகளிலும் வென்ற ஜோதி, இத்தொடரில் மொத்தம் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றினார்.

வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) சிக்கன் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் கறிக்கோழி விலை கிலோ (உயிருடன்) விலை ₹3 உயர்ந்து, ₹119க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை உயர்ந்ததால் மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை கிலோ ₹10 வரை உயர வாய்ப்புள்ளது. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக கடந்த சில நாள்களாக விலை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

திமுக, அதிமுக ஆட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் என்பது தீராத வியாதியாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு அருகே நெல் மூடைகளை விற்க லஞ்சம் கேட்ட அதிகாரிகளை, தட்டிக் கேட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதாக அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், கொலை, கொள்ளை, போதை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி விவசாயிகள், கிளி ஜோதிடர்களை கைது செய்வதாக சாடினார்.

நேற்று நடந்த 2 IPL போட்டிகளில் ( LSG-RR, DC-MI) பண்ட், ராகுல், சஞ்சு, இஷான் கிஷன் என 4 விக்கெட் கீப்பர்கள் களமிறங்கினர். T20 WC அணியில் விக்கெட் கீப்பராக இடம்பெறபோவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாக இது அமைந்தது. இதில் சஞ்சு கீப்பிங், பேட்டிங்கில் அசத்தினார். பண்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால், இருவரில் ஒருவர் T20 WC அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் நிலையில், தென் மாவட்டங்களில் வெயில் தாக்கம் சற்று குறைந்துள்ளது. அவ்வப்போது மழையும் பெய்வதால், குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

நடப்பு ஆண்டுக்கான செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டி நவ.20 முதல் டிச.15 வரை நடைபெறும் என ஃபிடே அறிவித்துள்ளது. இத்தொடரை நடத்த குறைந்தபட்ச தொகையாக ₹68 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், விருப்பம் கோருவோர் ஆன்லைனில் பதிவு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது ஜூலையில் முடிவாகும் எனத் தெரிகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

க்ரீன் டீயுடன் ஒப்பிடும் போது மாதுளை டீ மூன்று மடங்கு ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மாதுளைத் தேநீரை எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் மாதுளை தோல், இஞ்சி, புதினா இலைகள் சேர்த்து நீரூற்றி 1 – 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை குடிப்பதால், உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுமாம்.

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் 30ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலின்போது, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய், கரோங், ஒயினாம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய பொது விநியோக திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளதாகவும், அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.40 கோடி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் திருவந்திபுரம் தேவநாதப்பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும். கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் ஆற்றோரத்தில் அமைந்த இக்கோவில், நடுநாட்டு திருப்பதி எனப் போற்றப்படுகிறது. சனிக்கிழமையில் விரதமிருந்து இங்கு வந்து பூ தீர்த்தத்தில் நீராடி, தேவநாத சமேத செங்கமலத் தாயாருக்கு வில்வம் சாற்றி வணங்கினால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.