India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முன்னணி கார் டாக்ஸி நிறுவனமான ஓலா கேப்ஸ், அதன் 10% ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 200 பேர் வேலை இழப்பார்கள் எனத் தெரிகிறது. இது குறித்து விளக்கமளித்த அந்நிறுவனம், திறனை மேம்படுத்த மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தேவையற்ற பணிகளை நீக்கி, புதிய பணிகளை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னை & விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் இயற்கை எரிவாயு பஸ்களை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில், அனைத்து போக்குவரத்துக் கழகத்திலும் பஸ்கள் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்வதால், காற்று மாசு & செலவினத்தைக் குறைக்க முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திட்டமிட்டபடி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் பரவியதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அறிவித்தபடி மே 6இல் 12ஆம் வகுப்புக்கும், மே 10இல் பத்தாம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கோவை சிக்காரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதமாக மூடியிருந்த அந்த ஆலையில், பராமரிப்புப் பணி மேற்கொண்டு வந்தபோது, சிலிண்டர் வெடித்து அமோனியா கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாயு கசிவால், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், கசிவை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பாக, 3,000 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019 முதல் 2022 வரை பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் பென் டிரைவில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அந்த பென் டிரைவை தடயவியல் ஆய்வு மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவகவுடா குடும்பத்திற்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தாம்பத்ய உறவை மேம்படுத்தும் கணக்கற்ற மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழையை பச்சைத்தங்கம் என்று ஆயுர்வேதம் போற்றுகிறது. கற்றாழையில் டீ எப்படி தயார் செய்வதென பார்க்கலாம். கற்றாழையை சுத்தம் செய்து, அதன் நுங்கை 7 முறை நீரில் அலசி, வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு டீஸ்பூன் கற்றாழைப் பொடியை நீரில் 2 நிமிடங்கள் லேசான சூட்டில் கொதிக்க வைத்து ஆறிய பின், வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம்.

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து, பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்ய உத்தராகண்ட் அரசு தடை விதித்துள்ளது. அத்துடன், மருந்துகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் பொய்யான விளம்பரம் செய்த விவகாரத்தில், மத்திய அரசும், அம்மாநில அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 56 நிறுவனங்களின் காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகள் வெளியாகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதானி கிரீன் சொலூசன்ஸ், ஹாவெல்ஸ் இந்தியா, அதானி டோடல் கேஸ், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், காஸ்ட்ரோல் ஆயில், கிராவிட்டி இந்தியா, REC உள்ளிட்ட நிறுவனங்களின் முடிவுகள் வெளியாகவுள்ளன.

சிவபெருமானுடன், பஞ்ச மூர்த்தியரில் ஒருவராக பவனி வருபவர் விசாரசர்மர் சண்டிகேஸ்வரர். ஈசனின் அடியார் கூட்டத் தலைவனான இவர், எப்போதுமே சிவ சிந்தனையில் ஆழ்ந்திருப்பார். இவரின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்க, பக்தர்கள் சந்நிதியில் கைகளைத் தட்டுவது, சொடுக்கு போடுவது, நூல் பிரித்துப் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பெரிய பாவச் செயலாகும். சைவ நெறிப்படி இவ்விதமான செயல்களில் ஈடுபடக் கூடாது.

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகிவரும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு, கமல்ஹாசன், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை எழுத அவர் 3 நாள்கள் எடுத்துக் கொண்டதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் ரெக்கார்டிங் செய்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.