India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி தொலைக்காட்சியில் டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டுள்ளது. தனியார் பொறியியல் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமரா காட்சிகள் 10 நிமிடங்களுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள், அப்பிரச்னையை சரி செய்தனர். தற்போது ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி காட்சிகள் சீராக ஒளிபரப்பாகிறது.

காங்கிரசை சந்திரபாபு நாயுடு ரிமோட் மூலம் இயக்குவதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, ஜெகன் மோகன் ரெட்டியைதான் பிரதமர் மோடி இயக்குகிறார் என பதிலடி கொடுத்துள்ளார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜெகன் மோகன் கங்காவரம் துறைமுகத்தை அதானிக்கு வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

சென்னையில் ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கைதான 2 பேரும் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவ இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலின் 2 கட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தென்னிந்தியாவில் பாஜகவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், இரண்டு கட்ட வாக்குப்பதிவின் முடிவில், தங்கள் கணிப்பின்படி பாஜக கூட்டணி 100 இடங்களுக்கும் மேல் அபார வெற்றிபெறும் என்றார். மேலும், ‘400 இடங்கள்’ என்ற எங்களது முடிவை நோக்கிப் பயணிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், ஊழியர்களுக்கு மனநிலை சரியில்லையெனில் Unhappy Leave எடுத்துக் கொள்ளலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரமே வேலை செய்ய வேண்டும் என்பதே தனது கொள்கை எனக் கூறிய அந்நிறுவனத்தின் உரிமையாளர் யு டாங்லாய், தாங்கள் பணக்காரர்களாக இருப்பதைவிட, ஊழியர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் என்றார்.

போலி வீடியோக்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதில் பாஜகவினர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தனது குரலைப் போலியாக உருவாக்கி அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டிய பிரதமருக்கு பதில் அளித்த அவர், அவதூறு பேச்சுக்களை பேசுவது மோடியின் வாடிக்கை என்றார். தேர்தல் நேரத்திலாவது அவர் வெறுப்பு பேச்சுக்களை பேசாமல் இருக்க வேண்டும் என பதிலடி கொடுத்தார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாளாகும். புதிய விதிகளின் படி ஒரு நிதியாண்டில், முதல் அரையாண்டு நிதியை ஏப்ரல் 30, இரண்டாவது அரையாண்டு நிதியை அக்டோபர் 30க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, இன்றைக்குள் வரியை செலுத்தினால் அதிகபட்சமாக ₹5,000 தள்ளுபடி வழங்கப்படும். தாமதமாக வரி செலுத்தினால் மாதம் 1% தனி வட்டி விதிக்கப்படும்.

கென்யாவில் உள்ள மிகப்பழமையான கிஜாப் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல், கென்யாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன், பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், பலர் மாயமாகியுள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட சம்பவத்தை திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், அதில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியுள்ளதென கூறியுள்ளனர். இது தொடர்பாக பேசிய முருகன், ST/SC மக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ₹54,000க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,750க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹87க்கும், ஒரு கிலோ ₹87,000க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.