news

News March 14, 2025

எப்போதும் உன்னுடன் இருப்பேன் – KL ராகுல்

image

IPL தொடரில் டெல்லி கேப்டன் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துள்ளது. அக்சர் படேலை கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அக்சர் படேலுக்கு, KL ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வாழ்த்துகள் பப்பு. புதிய பயணம் சிறப்பாக அமைய எப்போதும் உன்னுடன் இருப்பேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என KL ராகுல் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.

News March 14, 2025

‘டாஸ்மாக்கில் எந்த ஊழலும் நடைபெறவில்லை’

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். டாஸ்மாக் டெண்டரில் எந்த ஊழலும், முறைகேடும் நடைபெறவில்லை. தமிழக அரசுக்கு எதிராக ED-ஐ மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஏவியுள்ளது. எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

TN Budget: அரசு ஊழியர்களுக்கு 5 முத்தான அறிவிப்புகள்

image

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட <<15757548>>EL விடுப்பு பணம்<<>> பெறுதல் முறை வரும் 1 முதல் அமலுக்கு வருகிறது. *சென்னையில் ₹110 கோடியில் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு. *அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் ₹1 கோடி விபத்து காப்பீடு.*அரசு அலுவலரின் பெண் பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்காக ₹5 லட்சம் வங்கி நிதியுதவி.*பணிக் காலத்தில் எதிர்பாராமல் மரணமடைந்தால் ஆயுள் காப்பீடாக ₹10 லட்சம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

News March 14, 2025

மக்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த திமுக

image

தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளதை காட்டுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். அரசின் கடனும், ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகளும் உயர்ந்துள்ளதாக சாடிய அவர், திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

IPL-க்கு எதிராக ஆள் சேர்க்கும் பாகிஸ்தான்

image

ஐபிஎல் தொடருக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக்கூடாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் கேட்டுக்கொண்டுள்ளார். பிசிசிஐ இந்திய வீரர்களை மற்ற நாடுகள் நடத்தும் லீக்கில் பங்கேற்க அனுமதிக்காதபோது நீங்கள் மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். நடப்பாண்டு IPL நடைபெறும் அதேநேரத்தில் PPL-லும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 14, 2025

பட்ஜெட்: ட்ரோல் செய்யப்படும் LED திரை ஃபார்முலா!

image

தமிழக பட்ஜெட்டை பார்க்க மாநிலம் முழுவதும் திமுக சார்பில் 1000+ LED திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், LED திரைகள் முன்பு காலி சேர்கள் தான் இருந்தாக அதிமுக விமர்சித்து வருகிறது. ‘யாருமே இல்லாத கடையில யாருக்கு சார் டீ ஆத்துறீங்க’ என்ற வாசகத்துடன் அதிமுக ஐடி விங் ட்ரோல் செய்து வருகிறது. முன்னதாக, LED திரைகள் முன்பு காலி சேர் இருந்ததை அண்ணாமலையும் குறிப்பிட்டு இருந்தார்.

News March 14, 2025

ஓடிடியில் மாஸ் காட்டிய ‘விடாமுயற்சி’…!

image

அஜித் நடிப்பில் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் விடாமுயற்சி. மாஸ் காட்சிகள் குறைவு என்றும், அஜித்திற்கு ஏற்ற கதாபாத்திரம் அல்ல என்றும் இந்த படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, கடந்த 3ஆம் தேதி நெட்பிளிக்ஸில், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் விடாமுயற்சி படம் வெளியானது. இந்நிலையில், தற்போதுவரை 3M வியூஸ்-க்கு மேல் பெற்றுள்ள இந்த படத்திற்கு, ஓடிடியில் அமோக வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

News March 14, 2025

எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

image

பள்ளிக்கல்விக்கு ₹46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு ₹26,678 கோடி, உள்ளாட்சிக்கு ₹29,465 கோடி, மின்துறைக்கு ₹21,178 கோடி, மக்கள் நல்வாழ்வுக்கு ₹21,906 கோடி, நெடுஞ்சாலைக்கு ₹20,722 கோடி, போக்குவரத்துக்கு ₹12,964 கோடி, நீர்வளத்துக்கு ₹9,460 கோடி, உயர்கல்விக்கு ₹8,494 கோடி, MSMEக்கு ₹5,833 கோடி, ஆதிதிராவிடர், பழங்குடியினத் துறைக்கு ₹3,924 கோடி ஒதுக்கீடு.

News March 14, 2025

2,562 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

image

தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என, பட்ஜெட் உரையில்
அவர் குறிப்பிட்டார்.

News March 14, 2025

தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு: இபிஎஸ் விமர்சனம்

image

3.50 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது 40,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுவும் இந்த பணியிடங்களை 9 மாதங்களில் எப்படி நிறைவேற்ற முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!