India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜன.28) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மகளிர் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து, CM ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் இந்தியாவில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மரியாதையான ஊதியத்தை பெற்றிடவும், அச்சம் இல்லாமல் வாழவும் திமுக அரசு துணை நிற்கும் என்ற Promise-ஐ தான் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

தங்கம் விலை இன்று (ஜன.27) சவரனுக்கு ₹520 குறைந்த நிலையில், வெள்ளி விலை அதற்கு நேர்மாறாக அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹12 உயர்ந்து ₹387-க்கும், 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹3.87 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் விலைக்கு இணையாக வெள்ளி விலையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

OPS அணியிலிருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திமுக, தவெக, மீண்டும் அதிமுக என படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் தீவிர விசுவாசியும், உசிலம்பட்டி தொகுதி MLA-வுமான ஐயப்பன், TTV தினகரனை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது, NDA-வில் OPS-ஐ இணைக்க நடைபெற்ற முயற்சியா அல்லது ஐயப்பன் அமமுகவில் இணைய விருப்பம் தெரிவித்தாரா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

முதலிரவு முடிவதற்குள்ளாகவே பிரசவ வலி வந்து ஒரு பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர் கருவுற்றது தெரிய வர, போலீஸை அணுகி இருவீட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, குழந்தை பிறந்துள்ளது.

தங்கம், வெள்ளி விலையை தொடர்ந்து இப்போது காப்பரின்(செப்பு) விலையும் அதிரடியாக உயர்வு கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இது 62% லாபத்தை முதலீட்டாளர்களுக்குத் தந்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், அதில் டிரேடிங் செய்வது நல்ல ஆப்ஷன் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால், சரியான ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்க.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற <<18909962>>வர்த்தக ஒப்பந்தம்<<>> இந்திய மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் என PM மோடி கூறியுள்ளார். 4-வது இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்துப் பேசிய பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மதிப்புடையது என்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நார்வே PM-க்கு, டிரம்ப் தரப்பில் எழுதப்பட்ட லெட்டரில் தவறுகள் இருப்பதாகக் கூறி நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். டீச்சரை போல, லெட்டரை திருத்தி D+ Grade(ஜஸ்ட் பாஸ்) கொடுத்து, Improvement வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட நாட்டின் அதிபர் லெட்டரே இப்படியா? பிற நாட்டு தலைவரை Dear என குறிப்பிடுவதா? கொஞ்சம் Professionalism வேண்டாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

‘ஜன நாயகன்’ படத்திற்கு உடனடியாக U/A சான்று வழங்க உத்தரவிட்டிருந்த நீதிபதி ஆஷாவின் உத்தரவை இரு <<18971849>>நீதிபதிகள் அமர்வு ரத்து<<>> செய்துள்ளது. அதேநேரம், ராணுவம் தொடர்பான காட்சிகள், மத பிரச்னைகளை தூண்டும் காட்சிகள் இருப்பதாக எழுந்த புகார்கள் தொடர்பாக விசாரித்து மறு ஆய்வுக் குழுவுக்கு (RC) அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், ஜன நாயகன் பட ரிலீஸ் மேலும் சில வாரங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

விஜய பிரபாகரன் போட்டியிடவுள்ள தொகுதி பற்றி பிரேமலதா முதல்முறையாக வெளிப்படையாக பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என பிரேமலதா அறிவித்துள்ளார். முன்னதாக, 2024 மக்களவை தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், கடைசிவரை மாணிக்கம் தாகூருக்கு டஃப் கொடுத்திருந்தார்.
Sorry, no posts matched your criteria.