India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

T20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கோலி ஜோடி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததால், 2 பேரும் T20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர். குறிப்பாக, கோலி களமிறக்கப்படாமல் இருந்தார். இந்நிலையில் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுவதைக் கவனத்தில் கொண்டு 2024 உலகக் கோப்பை அணியில் 2 பேரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி காங்கிரஸ் தலைவராகத் தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கும் அவர், இடைக்காலத் தலைவராகச் செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதற்கு முன் தலைவராக இருந்த அரவிந்தர் சிங் லவ்லி, சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். அப்போது, காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துத் தொடங்கிய கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

உலகக் கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை. சாய் சுதர்சன், தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, நடராஜன் ஆகியோர் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி வந்தாலும் அவர்களுக்கு உலகக் கோப்பை அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த WC(2022) தொடரில் இடம்பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் நடப்பு ஐபிஎல் தொடரிலும் ஜொலிக்காததால் அவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

20 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளனர். காயத்தால் விளையாடாமல் இருந்து பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஐபிஎல்லில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல் அதிரடி வீரர்கள் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும், ஐபிஎல்லில் கலக்கி வரும் சாஹலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

‘ரோஜா’ சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி, வீட்டை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். பிறகு, தனது கணவருடனான ரொமாண்டிக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பகிர்ந்து வந்தார். இந்நிலையில், அந்தப் புகைப்படங்களை திடீரென நீக்கியதால், அவர் விவாகரத்து பெற்றதாக தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கணவருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் வாய்ந்த வீரரான கே.எல்.ராகுலுக்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 378 ரன்கள் எடுத்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளார். நடப்புத் தொடரில் பண்ட், சஞ்சு சாம்சன் இருவரும் மிகச் சிறப்பாக ஆடி வருவதால் ராகுலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்குக் கடன் தருவதற்கு ஒப்புதல் வழங்கிய நாளில் இருந்து, கடனுக்கான வட்டியைக் கணக்கிடக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், வாடிக்கையாளர்களுக்கு எப்போது கடன் கொடுக்கப்படுகிறதோ, அந்த நாளில் இருந்துதான் கடனுக்கான வட்டியைக் கணக்கிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை வங்கிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவின் விவகாரம் வெளியே வந்ததன் பின்னணியில் பாஜக நிர்வாகி இருக்கலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரஜ்வாலிடம் டிரைவராகப் பணியாற்றிய கார்த்திக், இந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக நிர்வாகி தேவராஜே கவுடாவிடம் கொடுத்ததாகக் கூறியுள்ளார். முன்னர் தேவராஜே, பிரஜ்வாலின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஜித்து மாதவன் இயக்கத்தில், ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா, ஃபகத் பாசிலைப் பாராட்டியுள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், சூப்பர் ஸ்டார் ஃபகத் பாசில் எனப் புகழ்ந்துள்ளார். வெறித்தனமாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்டுப், படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சுனில் நரேனும் நானும் அதிகமாகப் பேசிக்கொள்ள மாட்டோம் என்று KKR அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி கூறியுள்ளார். நான் சரியாகப் பந்து வீசவில்லை என்றாலோ எனக்கு ஏதேனும் ஒரு பிரச்னை என்றாலோ சுனில் உடனே வந்து எனக்குத் துணை நிற்பார் என்று கூறிய வருண், ஆறுதல் சொல்லித் தேற்றுவார் என்றார். ஷாருக்கானும், அபிஷேக் நாயரும் அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.