India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிப்பதற்கு வானில் மேகக் கூட்டங்கள் இல்லாததே காரணம் என்று வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், வானில் மேகக் கூட்டங்கள் இருந்தால்தான், சூரியனில் இருந்து வரும் வெப்பத்தைத் தடுக்கும் என்றும், இல்லையெனில் வெப்பம் அப்படியே பூமியைத் தாக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் வெப்பஅலை வீசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1ஆம் தேதி நடத்தக் கூடாதென பாமக தலைவர் ராமதாஸ் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி மறைவை அடுத்து, ஏப்.8ஆம் தேதி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இன்னமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், வெப்ப அலை வீசும் ஜூன் மாதம் இடைத்தேர்தலை நடத்த சரியான நேரம் அல்ல. வெப்பம் தணிந்த பின் தேர்தலை நடத்தலாமென்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியில் பார்பி படத்தில் நடித்த பிறகு, எந்த வாய்ப்பும் தனக்குக் கிடைக்கவில்லை என நடிகை இலியானா வேதனை தெரிவித்துள்ளார். பார்பி படத்தில் நடித்ததை வைத்து, தாம் இந்திக்குச் சென்று விட்டதாகவோ, தென்னிந்திய படங்களில் நடிக்கப் போவதில்லை என்றோ அர்த்தமில்லை என்று கூறியுள்ளார். ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதாகவும், ஆனால் அது கவனிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணைத் தாக்கியது தொடர்பாக டெல்லி அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷாவுக்கு மும்பை செஷன்ஸ் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. மதுபான விடுதியில் பிருத்வி ஷாவும், அவரது நண்பர் ஆஷிஷ் யாதவும் தன்னை பேட்டால் தாக்கியதாக சப்னா கில் என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிய மறுத்ததையடுத்து, நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த கோர்ட், ஜூன் 6ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தன. இந்த வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற வழக்கில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றியபோது எழுந்த புகாரில் 2018ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனையுடன் ₹2.42 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து தமிழக விவசாயிகள் 111 பேர் போட்டியிட இருப்பதாக விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 1 அன்று 7ஆம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் வாரணாசியில் பிரதமர் மோடி 3ஆவது முறையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ‘மோடியை எதிர்த்து வாரணாசியில் மொத்தம் 1,000 விவசாயிகள் போட்டியிட இருக்கின்றனர்’ என்றார்.

நெஸ்லே தயாரிப்புகளில் 100 கிராமில் அதிகப்பட்சம் 7.1 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளதாக அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுரேஷ் நாராயண் கூறியுள்ளார். 18 மாதங்களுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான உணவை உலகத் தரத்தில் நெஸ்லே தயாரித்து வருகிறது எனக் கூறிய அவர், இதனைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் ஏற்படாது என்றார். செரிலாக்கில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக FSSAI கூறியிருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான நிர்மலா தேவி, குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியின் முன் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். கல்லூரி மாணவிகளைத் தவறானப் பாதைக்கு அழைத்துச் சென்ற புகாரில், கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று தண்டனை விவரங்கள் அளிக்கப்பட உள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான அவர் நீதிபதியிடம் மன்றாடினார்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கப்பட்டு, பாண்டியா நியமிக்கப்பட்டது முதல் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், வேறு அணிக்கு ரோஹித் செல்லக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் T20 உலகக் கோப்பை அணி கேப்டனாக ரோஹித்தும், துணைக் கேப்டனாக பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2 பேரும் வேறுபாட்டை மறந்து அணிக்கு பாடுபடுவார்களா, இல்லையா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்
Sorry, no posts matched your criteria.