news

News May 8, 2024

உயர்கல்வியில் சேரும் முன் கவனிக்க வேண்டியவை

image

▶குடிநீர் வசதி, கழிவறை வசதி, நூலக வசதி, உணவு வசதி உள்ளதா? ▶கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு எப்படி உள்ளது? ▶அந்த கல்லூரியில் படித்த எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? ▶விளையாட்டு மைதானம் உள்ளதா? ▶நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் எத்தனை மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பட்டம் பெற்றுள்ளார்கள்? ▶கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

News May 8, 2024

பிஆர்எஸ், காங்கிரசை இணைப்பது ஊழல்: பிரதமர்

image

நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில் காங்கிரஸ் காணாமல் போய்விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் கரிம்நகரில் பிரசாரம் செய்த அவர், காங்கிரஸும், பிஆர்எஸ்ஸும் வேறல்ல, அவற்றை ஊழல் இணைக்கிறது என்றார். இரு கட்சிகளும் ‘முதலில் குடும்பம்’ என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டுள்ளதாகக் கூறிய அவர், ‘முதலில் தேசம்’ என்ற கொள்கையுடன் பாஜக செயல்படுவதாகக் கூறினார்.

News May 8, 2024

ஜெயக்குமாரின் எலும்புகளில் டிஎன்ஏ பரிசோதனை

image

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெயக்குமாரின் எலும்புகளை காவல்துறை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல், ஜெயக்குமாரின் உடல் தானா என அவரது குடும்பத்தாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில், தற்போது அவரது எலும்புகள் மதுரை மண்டல தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் டிஎன்ஏ அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 8, 2024

கபடியை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள்

image

▶தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த ‘கில்லி’ ▶சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’ ▶சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த ‘பட்டத்து அரசன்’ ▶சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா நடித்த ‘கென்னடி க்ளப்’ ▶ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ ▶மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைசன்’

News May 8, 2024

இன்னும் 1 போட்டியில் தோற்றால் கூட வீட்டுக்கு

image

குஜராத், மும்பை, பஞ்சாப், பெங்களூரு ஆகிய 4 அணிகள், இன்னும் ஒரு போட்டியில் தோற்றால் கூட நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடும். 4 அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி 4 இடங்களில் உள்ளன. RCB, GT, PBKS ஆகிய அணிகளுக்கு தலா 3 போட்டிகளும், MI-க்கு 2 போட்டிகளும் மீதம் உள்ளன. எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோற்றால் கூட, இந்த அணிகள் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது.

News May 8, 2024

ரூ.1000 பெற மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

image

அரசுப் பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் அரசு ரூ.1000 வழங்குகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக EMIS No) மாற்றுச்‌ சான்றிதழ்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. அதன்பின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும்.

News May 8, 2024

பிரதமருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை?

image

பாஜகவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காது என காங். மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் வெறுப்பு பேச்சுக்கு விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பாமல், பாஜகவிற்கு நோட்டீஸ் அனுப்பியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் ஆணையம் அனுப்பியதை நோட்டீஸாகவே கருத முடியாது என்றார். மேலும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வெட்கக்கேடானது எனவும் அவர் சாடினார்.

News May 8, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 9 செமீ மழை

image

தமிழ்நாட்டில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை & திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் மேலலத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய பகுதிகளில் 7 செமீ மழை பதிவாகியிருக்கிறது. விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவு மழை பெய்துள்ளது.

News May 8, 2024

ஐபிஎல்லில் 200 சிக்சர்கள் அடித்த வீரர்கள்

image

▶கிறிஸ் கெயில் – 357 (142 போட்டிகளில்) ▶ரோஹித் ஷர்மா – 276* (255 போட்டிகளில்) ▶விராட் கோலி – 258* (248 போட்டிகளில்) ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் – 251 (184 போட்டிகளில்) ▶எம்.எஸ்.தோனி – 248* (261 போட்டிகளில்) ▶டேவிட் வார்னர் – 236* (183 போட்டிகளில்) ▶கிரண் பொல்லார்டு – 223 (171 போட்டிகளில்) ▶ஆண்ரே ரஸல் – 207* (104 போட்டிகளில்) ▶சஞ்சு சாம்சன் – 205* (159 போட்டிகளில்) ▶சுரேஷ் ரெய்னா – 203 (205 போட்டிகளில்)

News May 8, 2024

மாணவர்களுக்கு மாதம் ₹1000..

image

மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!