India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை ஐகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1997இல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ₹1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, கேரள CM பினராயி விஜயனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் அவரை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக MP தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அழைப்பு விடுத்தனர். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு வலுவான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் உறுதியளித்தார்.
TN பட்ஜெட்டை காலி பட்ஜெட் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத வெற்று அறிவிப்பு என்றும் சாடியுள்ளார். மேலும், பட்ஜெட்டை நேரலையில் காண அரசு ஏற்பாடு செய்திருந்த ஒரு இடத்தில் நாற்காலிகள் காலியாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அரசின் பட்ஜெட்டும் இதுபோன்றே காலியாக இருப்பதில் வியப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிமெண்ட் நிறுவனங்கள் வெட்டியெடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது 1 டன்னுக்கு ₹160 தமிழக அரசு கூடுதல் வரியாக விதித்துள்ளதால், சிமெண்ட் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் வரி விதிப்பானது வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. சுண்ணாம்புக்கல்லுக்கு ஏற்கெனவே ராயல்டி வசூலிப்பதுடன், கூடுதலாக வரியும் விதிப்பதால் தங்கள் செலவு அதிகரிக்கும் என சிமெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால், 1% கட்டண சலுகை வழங்கப்படும் என தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹225 கோடியில், ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கோவை, திருச்சி, மதுரை, தாம்பரம், ஆவடியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய CCTV கேமராக்கள் பொருத்தப்படும். 150 வகையான அரசு சேவைகளை இணைய வழியில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கான அளவீடு, 10 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக கூறிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 10 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அரசின் இந்த அறிவிப்பு, வீட்டுமனை பட்டாவுக்காக காத்திருப்போருக்கு நிம்மதியை தந்துள்ளது.
திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்டில் திட்டங்கள் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளதாக, இபிஎஸ் குறை கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், கல்விக்கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்வு, டீசல் விலை ₹4 குறைப்பு, ரேஷனில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது என்றும் அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ₹2,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, லேப்டாப் (LAPTOP) அல்லது டேப் (TAB) பெற்று கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை ECR சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ தூரத்திற்கு ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்படுகிறது. மேலும், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலைக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவையில் அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ₹100 கோடி ஒதுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அண்ணா பல்கலை. சிறந்த கல்வி நிறுவனமாக தரவரிசையில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 5 ஆண்டுகளில் ₹500 கோடியில் பணிகள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.