India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பட்ஜெட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். அதன்படி, 2025-26ஆம் ஆண்டில் 1,721 முதுநிலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என, பட்ஜெட் உரையில்
அவர் குறிப்பிட்டார்.
3.50 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது 40,000 பணியிடங்களை மட்டுமே நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுவும் இந்த பணியிடங்களை 9 மாதங்களில் எப்படி நிறைவேற்ற முடியும் என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு செய்த தவறுகளை மறைக்கவே ரூபாய் குறியீடு மாற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த அவர், திமுக அரசு மீது மக்கள் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ்ப் பெருமிதம் என தமிழக பட்ஜெட்டில் அனைவருக்குமான பல திட்டங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற உயரிய நோக்கத்துடன் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை இந்த பட்ஜெட் அமைத்து தந்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
சென்னை அருகே 2,000 ஏக்கரில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம். வேளச்சேரியில் புதிய பாலம் அமைக்க ₹310 கோடி. திருவான்மியூர் – உத்தண்டி 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க ₹2,100 கோடி. ₹100 கோடியில் சென்னை அறிவியல் மையம். வண்ணாரப்பேட்டை, கிண்டியில் பன்முகப் போக்குவரத்து முனையம். குடிநீர் விநியோகிக்க ₹2,423 கோடி. மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்க ரூ.88 கோடி என பல திட்டங்கள் அறிவிப்பு.
<<15756270>>அரசு ஊழியர்கள்<<>> ஈட்டிய விடுப்பு (EL) சரண் செய்து பணமாக பெறும் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணம் பெறும் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வரும் ஏப்.1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாகவும், ஆண்டுக்கு 15 நாள்கள் வரை சரண் செய்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
SC & ST நலத்துறைக்கு ₹3,000 கோடியும், BC, MBC நலத்துறைக்கு ₹1,563 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மத்திய அரசு உரிய நிதி அளிக்காததால், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகை மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் எனக் கூறிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் 5வது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இருமொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பள்ளிகளுக்கு தேவையான நிதியை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 2.38 மணி நேரம் வரை பட்ஜெட் உரை நீடித்தது. வேளாண் பட்ஜெட் நாளை ( மார்ச்.15) தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் மீதான விவாதம் வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது.
டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழல் தொடர்பாக மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பது மட்டுமின்றி, அதிலும் ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றனர். இதற்கு காரணமான செந்தில் பாலாஜி, முத்துசாமியை பதவி நீக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஏப்.30 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சட்டப்பேரவையில் நாளை வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
73 வருடங்களில் தமிழகத்தின் கடன் ₹5.18 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், திமுக ஆட்சியில் 3 வருடங்களில் ₹3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடன் வாங்கித்தான் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சம்பளம் கொடுப்பதாக சாடிய அவர், அதிமுக அரசின் திட்டங்களை புதிய திட்டங்கள் போல் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர் என்றும் குறை கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.