India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமின்கோரி, பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை இன்று பரிசீலித்த கோர்ட், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தருண் கொண்டுருவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழக பட்ஜெட்டில் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கான நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பங்களிப்பான ரூ.1,500 மற்றும் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பான ரூ.6,500 என மொத்தம் ரூ.8,000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்டகாலமாக மீட்கப்படாத விசைப் படகுகளுக்கான நிவாரணம் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்காக பல்வேறு அசத்தலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. •கடல் அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க ஆய்வுத் திட்டங்கள் •இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தினசரி நிவாரணம் ரூ. 500. •இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரண தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் உள்ளன.
பலுசிஸ்தானில் நடந்த ரயில் கடத்தலுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்று இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பிறர் மீது பழி சொல்லும் முன், பாகிஸ்தான் தன்னை முதலில் உற்று நோக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டத்தின்கீழ், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து மாதம் ரூ.5,000, ஒரு முறை ரூ.6,000 மத்திய அரசு கொடுக்கிறது. இதில் சேர வருகிற 31ஆம் தேதி கடைசி நாள். இதில் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க கணினியை மட்டும் மக்கள் நம்பி இருந்தனர். இதை எளிதாக்கும் வகையில், 17ம் தேதி புதிய செயலியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்யவுள்ளார்.
ரீல்ஸ், ஷார்ட்ஸ் என சோஷியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் நடிகை கயாடு லோஹர்தான் இருக்கிறார். டிராகன் பட வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், டிராகன் படம் எனது வாழ்க்கையை மாற்றி இருப்பதாக கயாடு உருக்கமாக பதிவிட்டுள்ளார். ‘என் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இந்த அன்பு விலைமதிப்பற்றது’ என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கைகள், எலான் மஸ்கிற்கு எதிராகவே திரும்பியுள்ளன. டிரம்புக்கு போட்டியாக, USA இறக்குமதிகளுக்கு மற்ற நாடுகளும் அதிகம் வரி விதிக்க தொடங்கினால், அது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் டெஸ்லா EV கார்களின் உற்பத்தி விலை அதிகரிப்பதோடு, சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்வது கடினமாகும் என அந்நிறுவனம், டிரம்ப் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளது.
12ஆம் வகுப்பு அக்கவுண்டன்சி தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த சிபிஎஸ்இ-யின் பாடத்திட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் தந்ததும், இது அமலுக்கு வரும். தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் மாணாக்கர்கள் மட்டும் கால்குலேட்டர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிபிஎஸ்இயின் இந்த முடிவால் மாணவர்கள் அனைவரும் பயனடைவர் எனக் கூறப்படுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.
மூத்த பாலிவுட் நடிகர் தேவ் முகர்ஜி (83) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கிங் அங்கிள், காமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தேவ் முகர்ஜி. இவர், பிரமாஸ்திரா பட இயக்குநர் அயன் முகர்ஜியின் தந்தை. மேலும், ராணி முகர்ஜி, கஜோலின் உறவினர். அவரின் தந்தை சசாதார் முகர்ஜியும் புகழ்பெற்ற தயாரிப்பாளர். தாயார் சதிதேவி முகர்ஜி, புகழ்பெற்ற நடிகர்கள் அசோக் குமார், அனுப் குமார், கிசோர் குமாரின் சகாேதரி ஆவார்.
ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.