news

News April 30, 2025

ராசி பலன்கள் (30.04.2025)

image

➤மேஷம் – பயம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – எதிர்ப்பு ➤துலாம் – ஆக்கம் ➤விருச்சிகம் – பொறுமை ➤தனுசு – பேராசை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நட்பு ➤மீனம் – புகழ்.

News April 30, 2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவு?

image

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி 2024 குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்.14-ல் நடைபெற்று, டிசம்பரில் முடிவுகள் வெளியாகின. மேலும், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு ஜூலை 15-ல் வெளியாகி, செப்டம்பரில் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News April 29, 2025

₹100, ₹200 நோட்டுகள் குறித்து RBI முக்கிய முடிவு!

image

ATMகளில் பணம் எடுக்கும் போது, தற்போது ₹100, ₹200 நோட்டுகள் பெரிதாக கிடைப்பதில்லை. இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனால், இனி அனைத்து ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. செப். மாதத்திற்குள் நாட்டில் 75% ATMகளிலும், மார்ச் 2026-க்குள் 90% ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு ATMகளில் ₹100, ₹200 கிடைக்குதா?

News April 29, 2025

IND மகளிர் அணிக்கு அபராதம் விதிப்பு

image

IND, SL, RSA பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. RSA-க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, ஏப்.27-ல் நடைபெற்ற SL-க்கு எதிரான ஆட்டத்தின்போது வெற்றி பெற்ற IND அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

image

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.

News April 29, 2025

செல்வத்தை கொடுக்கும் அட்சய திருதியை குபேர வழிபாடு!

image

காலை குளித்து, வீட்டில் இருக்கும் லட்சுமி நாராயணன், குபேரனின் படங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகளை சாற்றுங்கள். ஒரு செம்பில் அரிசி, மஞ்சள், சிறிய நகைகளை வைத்து, அருகில் குத்து விளக்கு ஏற்றி வைக்கவும். தேங்காயை மாவிலை கலசம் தயார் செய்து அதன் முன், நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, விளக்கு ஏற்றி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். நெய்வேத்தியமாக பால் பாயாசம் செய்யலாம்.

News April 29, 2025

இன்ஸ்டாவால் வந்த விபரீதம்.. இளம்பெண் கேங் ரேப்

image

இன்ஸ்டா நண்பரை பார்க்கச் சென்ற இளம்பெண், கேங் ரேப் செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட், ராஞ்சியை சேர்ந்தவர் விஷ்ணு. இன்ஸ்டா மூலமாக இளம்பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்த அவர், ஆசைவார்த்தைகளை கூறி அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்றுள்ளார். நம்பி வந்த பெண்ணை, அங்கு ஏற்கனவே காத்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து கேங் ரேப் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் மூவரையும் கைது செய்துள்ளது.

News April 29, 2025

மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்ட நடிகர்

image

கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் சாக்கோ, போதை மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஹைப்ரிட் கஞ்சா பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன் இவர் கைது செய்யப்பட்டார். இவரோடு, ஸ்ரீநாத் பாசி உட்பட மூன்று திரையுலகினரும் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சாக்கோ போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

News April 29, 2025

IPL: DC அணிக்கு 205 ரன்கள் இலக்கு

image

டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், DC அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது KKR. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் படேல், பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய KKR அணியின் வீரர்கள் அனைவரும் நிலைத்து விளையாடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் குவித்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் KKR 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.

News April 29, 2025

ஆணுறை: செய்யக்கூடாத 7 விஷயங்கள்

image

*Expiry date முடிந்த, சேதமான, ஒட்டிக்கொண்ட ஆணுறைகளை பயன்படுத்தக் கூடாது *அலர்ஜி ஏற்பட்டால் தவிர்க்கவும் *வெப்பம் உள்ள இடங்களில் வைக்கக் கூடாது *காண்டம் கவரை பிரிக்க பற்கள், கத்தரிக்கோல், நகங்கள், அல்லது வேறு எந்த கூரான பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது *எண்ணெய், வாசலின், கிரீம் எதையும் அதன்மீது பயன்படுத்தக் கூடாது *ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் *டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்யக் கூடாது.

error: Content is protected !!