news

News April 30, 2025

100 நாள்கள்.. 200 வழக்குகள்..!

image

USA அதிபராக டிரம்ப் பதவியேற்று 100 நாள்கள் கழிந்துள்ளன. இந்த காலகட்டத்தில் அவர் மீது 200 வழக்குகள் பதிவாகியுள்ளன. குடியுரிமை, பிற நாடுகளுடன் வரி, வர்த்தக போர் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இஸ்ரேல், உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், போர் ஓய்ந்தபாடில்லை. USA-வின் அரசியல் பிறநாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், அவரது ஆட்சிக்கு நீங்கள் போடும் மார்க் என்ன?

News April 30, 2025

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!

image

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர்(100) காலமானார். 1976-ல் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2008-ம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். Blue velvet, Disturbed போன்ற மெகா ஹிட் படங்களிலும் Flash, Dallas போன்ற பிரபலமான ஹிட் தொடர்களிலும் பிரிஸ்கில்லா நடித்துள்ளார். இவர் மறைவுக்கு ரசிகர்களும், திரை துறையினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.

News April 30, 2025

மார்னிங் செய்ய வேண்டிய இந்த ‘3’ சீக்ரெட்ஸ் தெரியுமா

image

காலையில் நாம் செய்யும் சில சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளை அதிகரிக்கும் ★எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் ★காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் போன்றவை உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ★எக்காரணத்திற்காகவும் காலை உணவைத் தவற விடாதீர்கள். ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ட்ரை பண்ணுங்க. SHARE IT.

News April 30, 2025

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: திமுக

image

பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டுமென டிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை வைத்துள்ளார். பஹல்காமில் நடந்தது குறித்து மக்கள் தெரிந்துகொள்வதற்கு நாடாளுமன்ற விவாதம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, எல்லா கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.

News April 30, 2025

அட்சய திருதியை நாளில் வணங்க வேண்டிய கடவுள்கள்!

image

அட்சய திருதியை குறைவில்லாத பெருக்கத்திற்கான நாளாகும். இந்நாளில் கடவுளை வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். விஷ்ணுவை வணங்குவது செல்வம், மகிழ்ச்சியை கொடுக்கும். லட்சுமியை வணங்குவது பணம், அதிர்ஷ்டத்தை கொடுக்கும். விநாயகரை வணங்குவது தடைகளை நீக்கும். குபேரனை வணங்குவது செல்வத்தை கொடுக்கும். சிவனை வணங்குவது மன அமைதியை கொடுக்கும். SHARE IT.

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க சிறப்பு சலுகை!

image

அட்சய திருதியையொட்டி பல நகைக் கடைகள் தங்கம் வாங்கச் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விற்பனை குறைந்துள்ளது. இதனால், இன்று பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. அட்சய திருதியை நாளான இன்று(ஏப்.30) தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 30, 2025

நாளை சூரியின் ட்ரீட்!

image

‘மாமன்’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக, சூரி அறிவித்துள்ளார். ஹீரோவாக அறிமுகமானது முதல் இதுவரை சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, தற்போது முதன்முறையாக குடும்ப உறவுகள் பற்றிய படத்தில் நடித்துள்ளதால், இப்படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். அதேபோல், ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ‘விலங்கு’ வெப்சீரிஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

News April 30, 2025

தொகுதியை டிக் செய்த விஜய்.. இங்கேயா போட்டி?

image

2026 தேர்தலில் கோவையில் விஜய் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான், முதல் பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு நடத்தியதாம், அங்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து முடிவெடுக்கலாம் என தவெக தரப்பு நினைத்ததாம். ஆனால், நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், ஏறக்குறைய அத்தொகுதியை விஜய் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற தொகுதிகளிலும் பல்ஸ் பார்க்கப்படுமாம்.

News April 30, 2025

அட்சய திருதியையில் தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு

image

கங்கை நதி விண்ணிலிருந்து பூமியை முதன்முதலில் தொட்ட நாள் அட்சய திருதியை என நம்பப்படுகிறது. இன்று தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதால், அவை மென்மேலும் வாங்கக்கூடிய யோகத்தை வழங்கும் என்பார்கள். தங்கம் வாங்குவதற்கு இது மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்ச்சியான செல்வ வளர்ச்சியை உறுதி செய்கிறது. இன்று தங்கம் வாங்க சிறந்த நேரம் காலை 5:40 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

News April 30, 2025

உள்ளாட்சித் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையர் அதிரடி!

image

உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்திய அவர், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த அறிவுறுத்தினார்.

error: Content is protected !!