news

News May 7, 2025

பாக்., ஒப்புதல் வாக்குமூலம்…USA கப்சிப்

image

USA நலனுக்காகவே பாக்., தீவிரவாதத்தை ஆதரித்ததாக அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்த கருத்து புயலைக் கிளப்பியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், விரைவில் இந்தியா-பாக்., வெளியுறவு அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். அப்போது பாக்., அமைச்சரின் கருத்து குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். USA-ன் மௌனம் எதை உணர்த்துகிறது?

விஜய்யை கவலைப்பட வைத்த தவெக தொண்டர்கள்!

image

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கின்போது தவெக தொண்டர்கள் செய்த செயல்களால் விஜய் கவலையடைந்துள்ளார். பைக்கில் தலைக் கவசமின்றி பின்தொடர்வது, வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்கள் தனக்கு கவலை அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ‘எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம். நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்’ எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் ஹாலிவுட் நடிகை மரணம்!

image

பழம்பெரும் ஹாலிவுட் நடிகையான பிரிஸ்கில்லா பாய்ண்டர் காலமானார். அவருக்கு வயது 100. 1976-ல் நடிக்க தொடங்கி, 2008-ல் வயதின் காரணமாக ஹாலிவுட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் பிரபல இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் முன்னாள் மாமியார் ஆவார். மிக பிரபலமான Flash தொடர்களிலும் முக்கிய கேரக்டரில் இவர் நடித்துள்ளார். பிரிஸ்கில்லாவின் மறைவுக்கு திரைத் துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News May 7, 2025

3 தமிழர்கள் உயிரிழப்பு.. இபிஎஸ் இரங்கல்

image

கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்தில் கரூரைச் சேர்ந்த 3 பேர் உள்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவித்த இபிஎஸ், 3 தமிழர்கள் உள்பட பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். படுகாயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

டல்லடிக்கும் டிக்கெட் விற்பனை!

image

நடப்பு தொடரில், CSK மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், ரசிகர்களும் அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை நடைபெறும் CSK vs PBKS போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிக மந்தமாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சில கேலரிகளில் இன்னும் டிக்கெட் முழுமையாக விற்கப்படவே இல்லை. CSK-வில் என்ன பிரச்னை. எதை மாற்றினால், சிங்கம் மீண்டும் வீறுநடை போடும்?

News May 7, 2025

100 நாள்.. 140 அறிவிப்புகள்.. ட்ரம்ப் அதிரடி

image

USA அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் 140 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கூறி இந்தியர்களை சங்கிலியால் கட்டி நாடு கடத்தினார். வரிகளை உயர்த்தி சர்வதேச வர்த்தகப் போரை தொடங்கினார். நட்பு நாடுகளான உக்ரைன், கனடா தலைவர்களை அவமானப்படுத்தினார். பரம எதிரி புதினை புகழ்ந்தார். எலான் மஸ்க் ஆலோசனையில் அரசு ஊழியர்களை குறைத்தார். எப்படி இருக்கு ட்ரம்ப் நிர்வாகம்?

News May 7, 2025

அட்சய திருதியைக்கு இலவச தங்கம்.. ஜியோவின் ஆஃபர்!

image

அட்சய திருதியை முன்னிட்டு ₹1000 இருந்தால், டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து, அதற்கு இலவச தங்கம் பெறும் திட்டத்தை ‘Jio Finance’ கொண்டுவந்துள்ளது. ஏப்ரல் 29 – மே 5 வரை, JioFinance அல்லது MyJio ஆப்களில், ₹1,000 – ₹9,999 வரை வாங்கினால் 1% இலவச தங்கமும் , ₹10,000-க்கு மேல் வாங்கினால், 2% இலவச தங்கமும் வழங்கப்படுகிறது. இதற்கு வழங்கப்படும் கூப்பனை இந்த ஆப்பிலேயே Redeem செய்து கொள்ளலாம். SHARE IT.

News May 7, 2025

பங்குச் சந்தையில் பச்சைக் கொடி.. மாத இறுதியில் ஹேப்பி

image

மாத இறுதி நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து 80,373 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல், நிப்ஃடி 26 புள்ளிகள் உயர்ந்து 24,362 புள்ளிகளை பெற்றுள்ளது. HDFC LIFE பங்குகள் இன்று அதிக லாபத்தில் உள்ளன. அதேநேரத்தில், இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

error: Content is protected !!