India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TNPSC குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க (ஏப்.30) இன்றே கடைசி நாளாகும். துணை ஆட்சியர் முதல் உதவி வனப் பாதுகாவலர் வரை மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஏப்.1-ம் தேதி வெளியானது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
டெல்லியில் PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து 6-வது நாளாகப் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஎஸ்இ (ICSE) 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. results.cisce.org மற்றும் <
’ஊர்ந்து’ என்ற வார்த்தையை கேட்டாலே அதிமுகவினருக்கு கோபம் வருகிறது என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த. வேலு இல்லத் திருமண விழாவில் பேசிய அவர், மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியான ஆட்சியை திமுக வழங்கி வருகிறது என்றார். நேற்று பேரவையில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்தது என CM பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது இருக்கும் விலைக்கு நாம் எப்படி தங்கம் வாங்குறது என அட்சய திருதியையில் வருத்தமாக இருக்கிறீர்களா? கவலைய விடுங்க பாஸு. இந்த கோல்டை வாங்கிக்கோங்க. யாரோ ஒரு கடைக்காரர், வியாபாரத்திற்காக யோசிச்சி பலரையும் மனமகிழ வைத்துள்ளார். Marry Gold, AVT Gold, Chakra Gold, MSS Gold இந்த கோல்டை இன்று வாங்கிக்கோங்க. இதுவும் கோல்ட் தானே சார்!
தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கும், அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக ப.பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரியில் நடைபெற்று வரும் அக்கட்சியின் 16-வது பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..

சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், எந்த கூட்டணி வந்தாலும், எந்த ஏஜென்சிகள் வந்தாலும், திமுக எதைப்பற்றியும் கவலைப்படாது, நிச்சயம் வெற்றிபெறும் என்றார். எமெர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் CM ஸ்டாலின் கூறினார்.

Sorry, no posts matched your criteria.