India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ₹12 கோடியில் பருத்தி சாகுபடி திட்டம் * 1 லட்சம் ஏக்கரில் ₹12 கோடியில் மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் * ₹15 கோடியில் 7 அரசு விதை சுத்திகரிப்பு நிலையம் * ₹146 கோடி செலவில் இந்த ஆண்டும் ‘முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டம்’ * ₹269 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டம் 2,335 ஊராட்சியில் செயல்படுத்தப்படும் என, அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதிக விளைச்சலைக் காட்டும் 3 விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசாக ₹2.50 லட்சம், 2வது பரிசாக ₹1.50 லட்சம், 3வது பரிசாக ₹1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 60% முதல் 70% ஆக உயர்த்தப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுதானிய இயக்கத்தை செயல்படுத்த ₹52 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதேபோல், எண்ணெய் வித்துகள் இயக்கம் ₹108 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இதன் மூலம் 90,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
₹42 கோடி மதிப்பீட்டில் 1,000 இடங்களில் ‘முதல்வர் உழவர் நலச் சேவை மையம்’ அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் பயிர் சாகுபடியை அதிகரிக்க ₹102 கோடியில் சிறப்புத் தொகுப்புத் திட்டம் மற்றும் ₹52 கோடி மதிப்பீட்டில் தரமான விதைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். தமிழகத்தில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். விவசாயிகள் கோடை உழவு செய்ய ஏதுவாக, ஹெக்டருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும் எனக் கூறிய அவர், இதற்காக ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலமற்ற உழவர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ₹ 1 லட்சத்தில் இருந்து ₹ 2 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இயற்கை மரணத்திற்கான நிதியுதவி ₹ 20,000லிருந்து ₹ 30,000ஆகவும், இறுதிச்சடங்குக்கான நிதியுதவி ₹ 2,500லிருந்து ₹ 10,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என, வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
TN சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதையொட்டி திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சைத் துண்டு அணிந்தபடி பேரவைக்கு வந்திருந்தனர். உழவர்கள் பாதுகாக்கப்பட்டால், அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்ற கருத்துடன் தனது வேளாண் பட்ஜெட் உரையை அவர் வாசிக்கத் தொடங்கினார்.
தமிழக பட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அப்போது, வேளாண் துறையில் இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும், கேழ்வரகு உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், கரும்பு உற்பத்தியில் 2ஆம் இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் 3ஆம் இடத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 15) சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராம் ₹8,220க்கும், சவரன் ₹65,760க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில், சவரனுக்கு ₹1,440 அதிகரித்த நிலையில், இன்று சரிவைச் சந்தித்துள்ளது.
2025 – 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் நேரலை காட்சிகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக ₹42 கோடி மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் 1,000 உழவர் சேவை மையங்கள், கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ₹2,000 மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?
Sorry, no posts matched your criteria.