news

News January 24, 2026

நாடாளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

image

சனே டகாய்ச்சி, ஜப்பான் பிரதமராக பதவியேற்ற 3 மாதங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்கு குறைந்த பெரும்பான்மை உள்ளதால், ஆளுங்கட்சியின் பலத்தை நிரூபிக்க இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ஜப்பானின் முதல் பெண் பிரதமரான இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

News January 24, 2026

அரசியலா.. நானா.. பதிலளித்த நடிகை

image

நடிகை பாவனா கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளராக களமிறங்குவதாக SM-ல் தகவல்கள் தீயாய் பரவின. இதுகுறித்து பேசிய அவர், இது முற்றிலும் பொய்யான செய்தி எனவும் தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளியும் இல்லாதபோது, இதுபோன்ற வதந்தி எப்படி பரவியது என்றே தெரியவில்லை எனவும் கூறினார். மேலும், இந்த செய்தியை பார்த்து நான் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை என்றார்.

News January 24, 2026

மணத்தக்காளி கீரையின் நன்மைகள்!

image

மணத்தக்காளி கீரை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். *செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். *வயிற்று புண், அஜீரணம், மலச்சிக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். *தோல் நோய்கள், முகப்பரு, தோல் அரிப்பு ஆகியவற்றை நீக்கும். *நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *இதில் வைட்டமின்கள் ஏ, சி, இ, இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

News January 24, 2026

சீனா கனடாவை தின்றுவிடும்: டிரம்ப்

image

சீனாவுடன் வணிகம் செய்வது கனடாவுக்கு ஆபத்து என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், கோல்டன் டோம் கிரீன்லாந்தின் மீது கட்டப்பட்டால் அது கனடாவையும் பாதுகாக்கும். இருப்பினும், கனடா அதற்கு எதிராக உள்ளது. ஆனால், இதற்கு பதிலாக சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்கு ஆவலோடு உள்ளது. ஆனால், ஒரு வருடத்திற்குள்ளேயே சீனா அவர்களை தின்றுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

News January 24, 2026

சாய் பல்லவியை பாராட்டிய ஆமிர் கான்

image

சாய் பல்லவி தற்போது இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளார். ஆமிர் கான் மகன் ஜூனைத் கானின் ஜோடியாக ‘ஏக் தின்’ என்ற படத்திலும், ‘ராமாயணா’ படத்திலும் நடித்துள்ளார். ‘ஏக் தின்’ படத்தில் அவரே டப்பிங் பேசியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய ஆமிர் கான், சாய் பல்லவி அருமையாக நடித்துள்ளதாகவும், தென்னிந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று சாய் பல்லவியை பாராட்டியுள்ளார்.

News January 24, 2026

ஜனவரி 24: வரலாற்றில் இன்று

image

*1922 – ராஜேஸ்வரி சாட்டர்ஜி, இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் பிறந்ததினம். *1939 – சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 28,000 பேர் உயிரிழந்தனர். *1966 – இந்திய இயற்பியலாளர் ஹோமி பாபா மறைந்த நாள். *1984 – இசையமைப்பாளர் டி.இமான் பிறந்தநாள். *இன்று தேசிய பெண் குழந்தை நாள்.

News January 24, 2026

468 நாட்களுக்கு பிறகு சூரியகுமார் அரைசதம்

image

T20 இந்திய அணி கேப்டன் சூரியகுமார், நியூசிலாந்து எதிரான 2-வது T20 போட்டியில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்கு வகித்தார். இந்த போட்டியில், 23 இன்னிங்ஸ்களுக்கு (468 நாட்கள்) பிறகு அரைசதம் விளாசினார். அதுவும், வெறும் 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். T20 உலகக் கோப்பைக்கு பின்னர் அவரது ஃபார்ம் குறித்து எழுந்த கேள்விகளுக்கும், சந்தேகங்களும் நேற்றைய போட்டியில் பதிலளித்தார்.

News January 24, 2026

ருக்மணிக்கு திருமணமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி

image

புகைப்படக் கலைஞர் சித்தாந்த் நாக் உடன் ருக்மணி இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதன்பின் SM-ல், நீண்டநாள் காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், இதற்கு ருக்மணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், இப்போது திருமணம் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

News January 24, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News January 24, 2026

அப்துல் கலாமின் பொன்மொழிகள்

image

*கனவு என்பது தூங்கும் போது காண்பதல்ல, உங்களை தூங்க விடாமல் செய்வதே கனவு. *உங்கள் பழக்கவழக்கங்கள் நிச்சயமாக உங்கள் எதிர்காலத்தை மாற்றும். *நம்பிக்கை மற்றும் கடின உழைப்பு இரண்டும் தோல்வி எனும் நோயைக் கொல்ல சிறந்த மருந்து. *ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கு சமம். *சூரியனைப் போல நீங்கள் பிரகாசிக்க விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரியுங்கள்.

error: Content is protected !!