news

News March 15, 2025

இலங்கை செல்லும் பிரதமர் மோடி

image

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவோடு இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மேலும், இந்திய நிதி உதவியுடன் சம்பூரில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் 4வது பயணம் இதுவாகும்.

News March 15, 2025

மகனுக்கு இரண்டாம் பிறப்பு… தாய் செய்த தியாகம்…!

image

பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற எத்தகைய தியாகத்தையும் செய்பவர்தான் அம்மா. டெல்லியில் ஒரு தாய், தனது மகனுக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்துள்ளார். சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகன் ராஜேஷுக்கு, 80 வயதான தாய் தர்ஷனா ஜெயின், தனது சிறுநீரகத்தை தானம் செய்து மறுவாழ்வு அளித்துள்ளார். தாயும், தானும் நலமுடன் இருப்பதாக ராஜேஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அம்மா எப்பவுமே கிரேட் தான்!

News March 15, 2025

உருவாகிறது ‘சசி’ கூட்டணி – கோலிவுட்டில் புது காம்போ!

image

ரோஜாக் கூட்டம், பூ, பிச்சைக்காரன் என தனித்துவமான படைப்புகளால் தனியே தெரியும் சினிமா இயக்குநர்களில் ஒருவர் சசி. மண்மணம் சார்ந்த படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் சசிக்குமார். இருவரும் புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ‘லப்பர் பந்து’ நாயகி ஸ்வாசிகா நடிக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு அடுத்த மாதம் கள்ளக்குறிச்சியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

News March 15, 2025

வேளாண் கடன் தள்ளுபடி என்ன ஆனது? ஜி.கே.வாசன்

image

வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? என ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையவில்லை என விமர்சித்துள்ளார். கரும்புக்கு ஊக்கத் தொகை போன்ற அறிவிப்புகள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் இருக்கிறது. கடந்த காலங்களை போல நடப்பு பட்ஜெட்டும் வளர்ச்சியை தராது என கூறியுள்ளார்.

News March 15, 2025

மொழி பெயர்ப்பு ஏர்பாட்ஸ்… ஆப்பிள் சூப்பர் திட்டம்

image

யார் எந்த மொழியில் பேசினாலும், அதை குறிப்பிட்ட ஒரு மொழியில் மட்டுமே கேட்கும் வகையில் ஏர்பாட்ஸ்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக இந்தாண்டு இறுதியில் ஏர்பாட்ஸ் சாப்ட்வேர் அப்டேட்டுகளை கொடுக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை செய்ததும் பிறர் எந்த மொழியில் போனில் பேசினாலும், அதை நாம் விரும்பும் மொழியில் கேட்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.

News March 15, 2025

வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி மேலும் குறைகிறது

image

ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 புள்ளிகள் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதை பின்பற்றி, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைத்தன. இந்நிலையில், பணவீக்கத்திற்கு ஏற்ப ஏப்ரல், ஜூன், அக்டோபரில் தலா 0.25 புள்ளிகள் என 0.75 புள்ளிகள் ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கக்கூடும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது. அப்படி குறைத்தால், வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி மேலும் குறையக்கூடும்.

News March 15, 2025

ENG எதிரான டெஸ்ட்: கேப்டனாக ரோஹித் தொடர்வாரா?

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக தொடர்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி காரணமாக AUS எதிரான BGT தொடரின் கடைசி டெஸ்டில் ரோகித் பங்கேற்காமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது. இதற்கிடையே, CT கோப்பையை IND கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித்தை நியமிக்க BCCI நிர்வாகிகள் விரும்புவதாக கூறப்படுகிறது.

News March 15, 2025

பச்சைத்துண்டு போட்டால் என்ன?

image

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனதை முன்னிட்டு திமுக MLAக்கள் அனைவரும் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, துரை முருகன், பெரிய கருப்பன், நேரு ஆகிய முன்னணி அமைச்சர்கள் மட்டும் பச்சைத்துண்டு அணியவில்லை. இதனை சோசியல் மீடியாவில் பகிரும் எதிர்க்கட்சியினர் தாங்களும் பச்சைத்துண்டு போட்டால் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.

News March 15, 2025

பவன் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்: TKS இளங்கோவன்

image

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள். ஆனால், தமிழ் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறார்கள் என பவன் கல்யாண் பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார். ‘இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதற்காக 1968-ல் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பவன் பிறந்திருக்கவே மாட்டார்’ என அவர் தெரிவித்துள்ளார்.

News March 15, 2025

சஜி மரணத்திற்கு விஜய் இரங்கல்

image

தவெகவின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த சஜி காலமானது, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் X போஸ்ட் செய்துள்ளார். என் மீதும் கழகத்தின் மீது அளவற்ற அன்பு கொண்டவர் என்று சஜியை பாராட்டியிருக்கும் விஜய், அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சஜி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

error: Content is protected !!