India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபாநாயகர் அப்பாவுவை அதிமுக EX அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இபிஎஸ்சுடன் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில் நடந்த சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தொகுதி பிரச்னை தொடர்பாக அப்பாவுவை சந்தித்ததாகவும், சபாநாயகரை எம்எல்ஏக்கள் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்றார்.
வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI ) அதிகாரிகள் 15 முறை அடித்ததாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதனை மறுத்து ஏடிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி 50-60 பக்கத்தில் கையெழுத்து வாங்கினர், அதில் 40 பக்கம் வெற்று காகிதம், அடித்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
<<15768647>>தெற்கு ரயில்வே<<>> பணிக்கான தேர்வெழுதும் தமிழக தேர்வர்கள் 90% பேருக்கு தெலங்கானாவில் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக சாடினார். தமிழக தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ரயிலுக்கு சொந்தக்காரர் என்ற வரலாறு கொண்டவர் பஞ்சாப்பின் சம்பூரன் சிங். லூதியானா- சண்டிகர் ரயில் பாதைக்காக அவரது நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால், உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் கோர்ட்டை நாடினார். அதில், சதாப்தி ரயிலை ஜப்தி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனையடுத்து, லூதியானா ஸ்டேஷன் சென்ற அவர் ரயிலின் உரிமையைப் பெற்றார். இருப்பினும், சிறிது நேரத்தில் கோர்ட் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் போல முதல்வர் ஸ்டாலினும் சிறைக்கு செல்வார் என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான முறைகேடு வழக்கில்தான் அப்போதைய முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது, தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக ED தெரிவித்திருக்கும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு பேசியுள்ளார்.
தான் இந்தி மொழியை ஒருபோதும் எதிர்த்ததில்லை; இந்தி திணிப்பை மட்டுமே எதிர்த்திருக்கிறேன் என ஆந்திரா DY CM <<15769285>>பவன் கல்யாண்<<>> தெரிவித்துள்ளார். மேலும், NEP இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிய அவர், தான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக, பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்பு GO BACK HINDI என பவன் கல்யாண் பதிவிட்டிருந்ததை கனிமொழி இன்று பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை கயாடு லோஹர், ‘டிராகன்’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசினார். கீர்த்தி கேரக்டரை தான் டைரக்டர் அஷ்வத் மாரிமுத்து முதலில் எனக்கு ஃபிக்ஸ் செய்திருந்தார். பின்னர்தான், பல்லவி கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டது. 2 ஹீரோயின் படம் என்றாலும், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் காட்டுவேன் என அவர் கூறினார். சொன்னபடியே செய்து, என் வாழ்க்கையையே இன்று அஷ்வத் மாற்றிவிட்டார் என கயாடு கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊதியத்தை விலைவாசிக்கு ஏற்ப உயர்த்த மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஊரக மேம்பாட்டுக்கான நிலைக்குழு, நாடு முழுவதும் ஒரே சீரான ஊதியத்தை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பரிந்துரை அளித்தும் செயல்படுத்தவில்லை எனவும் விமர்சித்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மூலம் வழங்கப்படும் 4 வருட ஆசிரியர் படிப்பில் (ITEP) சேருவதற்கு நடத்தப்படும் NCET எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்விற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க நாளையே தேதி (மார்ச் 16) கடைசி ஆகும். ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 4 ஆண்டுகால ஆசிரியர் படிப்பில் சேர இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. விண்ணப்பிக்க <
ஐபிஎல் 2025 தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்நிலையில், 2008 முதல் 2024 வரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் எந்த வீரர் அதிக சதம் அடித்துள்ளார் என்பதை பார்க்கலாம். இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சிபி அணி ஆட்டக்காரருமான விராட் கோலியே அதிக சதம் விளாசியுள்ளார். 244 போட்டிகள் விளையாடி இதுவரை 8 சதங்கள், 55 அரைசதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2016ல் 4 சதங்களுடன் 973 ரன்களை குவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.