news

News March 15, 2025

இரண்டு வானம்… வெற்றிக் கூட்டணியில் 3வது படம்!

image

இருவேறு ஜானர்களில் முண்டாசுப் பட்டி, ராட்சசன் என அசத்தலான ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். 2 படத்திலும் நடித்த விஷ்ணு விஷாலே, அவரது 3வது படத்திலும் கதாநாயகன். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இரண்டு வானம் என பெயரிடப்பட்டு வித்தியாசமான முறையில் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில், கதாநாயகியாக பிரேமலு பட புகழ் மமிதா பைஜு நடிக்கிறார்.

News March 15, 2025

1,000 கோடியல்ல, லட்சம் கோடி – குண்டை தூக்கிப் போடும் சீமான்

image

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாக அண்மையில் அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ. 1 லட்சம் கோடிக்குமேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜக அரசின் அமலாக்கத்துறை, திமுக அரசை காப்பாற்ற ரூ.1,000 கோடி மட்டுமே முறைகேடு எனக் கூறி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 15, 2025

பெண் எஸ்.ஐ. வன்கொடுமை, வீடியோ.. போலீஸ்காரர் கைது

image

இமாச்சல பிரதேசத்தில் பெண் எஸ்.ஐ.யை போலீஸ்காரர் பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூர் சென்ற பெண் எஸ்.ஐ. ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அறையை புக் செய்ய உதவிய போலீஸ்காரர், கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதை காட்டி மிரட்டி தொடர்ந்து ரேப் செய்துள்ளார். இதுகுறித்து பெண் எஸ்.ஐ. அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

News March 15, 2025

ஓய்வுக்கு பின் என்ன செய்வேன்? – மனம் திறந்த கோலி!

image

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் விராட் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது 36 வயதாகும் அவர், ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார். ஓய்வுபெற்ற பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், சக வீரரிடம் இதுபற்றி கேட்டபோது அவரும் இதே பதிலைத் தான் கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், நிறைய பயணங்கள் மேற்கொள்வேன் என்றும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

News March 15, 2025

மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

image

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

News March 15, 2025

தட்கல் டிக்கெட் தெரியும், ப்ரீமியம் தட்கல் தெரியுமா?

image

ரயில்களில் அவசரகால பயணத்திற்கு தட்கல் டிக்கெட் முறை அமலில் உள்ளது. இதேபோல், ரயில்வேயில் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் முறையும் செயல்பாட்டில் இருக்கிறது. அதாவது, தட்கல் டிக்கெட்டில் 30% தற்போது ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு செல்கிறது. இந்த டிக்கெட் கட்டணம், பேஸ் கட்டணத்தை விட 30% அதிகம். அதேபோல், தேவைக்கு ஏற்ப விமான கட்டணம் உயர்வது போல இதுவும் அதிகரிக்கும். இதை ரத்து செய்ய முடியாது.

News March 15, 2025

மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.

News March 15, 2025

சிக்கிமுக்கு சுற்றுலா போறீங்களா? இதை படிங்க

image

சிக்கிமுக்கு வரும் வெளிமாநில, வெளிநாட்டு பயணிகளிடம் நுழைவுக் கட்டணம் ரூ.50ஐ அந்த மாநில அரசு வசூலிக்கத் தொடங்கியுள்ளது. சிக்கிமுக்கு வரும் சிறார் தவிர்த்த சுற்றுலா பயணிகள், 30 நாட்கள் தங்கியிருக்க இந்த கட்டணம் ஹோட்டல்களில் வசூலிக்கப்படுகிறது. பின்னர் அத்தொகை மாநில சுற்றுலாத் துறையிடம் அளிக்கப்படுகிறது. இத்தொகையை கொண்டு சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்த சிக்கிம் அரசு திட்டமிட்டுள்ளது.

News March 15, 2025

செல்போனில் தலாக்… வசமாக சிக்கிய கணவர்!

image

இஸ்லாமில் விவாகரத்து செய்ய முத்தலாக் முறை உள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசு, தலாக் கூறி பெண்ணை பிரிவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது. இந்நிலையில், கேரளாவில் செல்போனில் தலாக் கூறிய கணவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஷாகுல் ஹமீது வரதட்சணை கேட்டு உடல், மன ரீதியில் தொல்லை கொடுத்ததாகவும், செல்போனில் தலாக் கூறியதாகவும் மனைவி அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News March 15, 2025

தங்கத்தை விட அதிகமாக உயரும் விலை

image

சர்வதேச சந்தையில் தாமிரத்தின் விலை தங்கத்தை விட வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு அவுன்ஸ் தாமிரம் (காப்பர்) நான்கு டாலருக்கு விற்பனையான நிலையில், வெறும் 3 மாதங்களில் அது ஐந்து டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 25% உயர்வு. இதனுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை கடந்த 3 மாதங்களில் 20% மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் காப்பரின் பக்கம் திரும்பியுள்ளது.

error: Content is protected !!