news

News March 16, 2025

நடிகை சமந்தா ஹாஸ்பிடலில் அட்மிட்

image

நடிகை சமந்தா மீண்டும் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. மயோசிடிஸ் நோயால் அவதியுற்று வரும் சமந்தா, அவ்வப்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தற்போது ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவது போன்ற போட்டோவை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் கவலையுற்ற ரசிகர்கள், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

News March 16, 2025

துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (1/2)

image

மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்றபோது, 16ஆவது மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரை (அதிமுக) பதவி வகித்தார். பின்னர் 17ஆவது மக்களவை சபாநாயகர் தேர்வில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வழக்கத்தை மத்திய அரசு கைவிட்டது. 18ஆவது மக்களவையிலும் இதே பிரச்னை நீடித்ததால், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை.

News March 16, 2025

துணை சபாநாயகர் பதவி என்னாச்சு? (2/2)

image

சபாநாயகர் இல்லாத நேரத்தில் மக்களவையை வழிநடத்த வேண்டியது துணை சபாநாயகர் கடமை. அது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பதவி. சபாநாயகருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் துணை சபாநாயகருக்கும் உண்டு. ஆனால் கடந்த 2 மக்களவையிலும் அவர் தேர்வு செய்யப்படாதது அரசியலமைப்பு சட்டத்தின் 93ஆவது பிரிவை மீறும் செயலாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

News March 16, 2025

’தமிழர் கட்சி’ கலைக்கப்பட்டது

image

தமிழ் தேசிய கொள்கையுடன் இயங்கிவந்த தமிழர் கட்சியை, நாம் தமிழர் கட்சியுடன் இணைக்கப் போவதாக அதன் பொதுச்செயலாளர் தீரன் திருமுருகன் அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இந்த இணைப்பு விழா நடைபெறவுள்ளது. தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் & தொண்டர்கள் மொத்தமாக நாம் தமிழர் கட்சியில் இணையவுள்ளனர். இதனால், ‘தமிழர் கட்சி’ கலைக்கப்படுகிறது.

News March 16, 2025

தமிழக பாஜக தலைவர் பதவி ரேஸில் இல்லை: எச்.ராஜா பேட்டி

image

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தாம் இல்லை என்று மூத்தத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அண்ணாமலை பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய தலைவர் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில், கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்யும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், பதவியை எப்போதும் கேட்டுப் பெறும் பழக்கம் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

News March 16, 2025

‘பைத்தியக்காரத்தனம்’… தோனி பற்றி பேசிய கோலி!

image

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக செயல்பட்டது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஃபீல்டிங் செட்டப் உள்ளிட்ட ஆட்ட வியூகங்களை பகிர்ந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என தோனி ரியாக்‌ஷன் கொடுப்பார் என்று அவர் ஜாலியாக கூறியுள்ளார். தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார்.

News March 16, 2025

மனிதரை கல்லாக்கும் கோயில்?

image

ராஜஸ்தானின் குல்தாரா கிராமத்தில் உள்ள கிரடு கோயிலுக்கு இரவில் யாரும் வருவதோ, தங்குவதோ இல்லை. இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, பழங்காலத்தில் முனிவர் ஒருவர் சீடர்களுடன் வந்ததாகவும், சீடர்கள் உடல்நிலை பாதித்தபோது உதவாத கிராமத்தினரை இரவில் கல்லாகிவிடுவர் என சாபமிட்டதாகவும், ஒரு பெண் கல்லானதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சமே இரவில் யாரும் அங்கு வராததற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

News March 16, 2025

ஐடி கார்டு இல்லாமல் ஆட்டோ ஓட்ட முடியாது

image

ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரும் வகையில், அடையாள அட்டை வழங்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம்பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, PHOTO உடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

News March 16, 2025

வெப்ப அலைக்கான ரெட் அலர்ட்

image

பங்குனி மாதம் தொடங்கியவுடனே வெயில் பல்லை இளித்துக் கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுகிறது. இந்நிலையில், ஒடிஷா மாநிலத்திற்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தெலங்கானா, ஜார்கண்ட், மே.வங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

News March 16, 2025

ஹபிஸ் சயீத் சுட்டுக் கொலை?

image

2008 மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாக். பயங்கரவாதி ஹபிஸ் சயீத் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாகாணம் ஜீலத்தில் காரில் சென்றபோது, பைக்கில் வந்த 2 பேரால் அவர் சுடப்பட்டதாகவும், இதில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்யவில்லை. அதேபோல, ஹபீஸ் சயீத் மகனும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் மறுத்துள்ளது.

error: Content is protected !!