news

News March 16, 2025

Rewind: சச்சின் சதத்தில் சதமடித்த நாள் இன்று!

image

மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அசைக்க முடியாத சாதனையை படைத்த நாள் இன்று (மார்ச் 16). 2012ம் ஆண்டு இதேநாளில், ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 100வது சர்வதேச சதத்தை அவர் பதிவு செய்தார். 13 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருக்கும் இந்த சாதனையை யார் தகர்ப்பார் என நினைக்கிறீர்கள்?

News March 16, 2025

பாஜகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?

image

இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிமுக மூத்த தலைவர்களே செங்கோட்டையனின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தபோதும், தான் சரியான பாதையில் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறி இருந்தார். இந்நிலையில், இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி என பாராட்டியுள்ள அவர், கொரோனா காலத்தில் அனைவரும் இலவச தடுப்பூசி போட்ட வரலாறு நம் மண்ணில் இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஒருவேள இருக்குமோ?

News March 16, 2025

ஏ.ஆர். ரகுமானை டைவர்ஸ் செய்யவில்லை: மனைவி

image

ஏ.ஆர். ரகுமானும், மனைவி சாய்ரா பானுவும் டைவர்ஸ் பெற்றதாக செய்திகள் முன்பு வெளியாகின. இந்நிலையில், உடல்நிலை பாதித்து ஹாஸ்பிடலில் ஏ.ஆர். ரகுமான் சேர்க்கப்பட்ட செய்திகள் இன்று வெளிவந்தது. அவர் உடல்நிலை குணமடைய வேண்டி அறிக்கை வெளியிட்ட சாய்ரா பானு, ‘2 பேரும் பிரிந்தே வாழ்கிறோம். அதிகாரப்பூர்வமாக டைவர்ஸ் பெறவில்லை. அதனால் என்னை முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்’ என வலியுறுத்தியுள்ளார்.

News March 16, 2025

நாறும்பூநாதன் மறைவு.. ஸ்டாலின் இரங்கல்

image

எழுத்தாளர் <<15778013>>நாறும்பூநாதன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். எழுத்தாளரும் TN முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தியதாக அவர் கூறியுள்ளார். நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அரசியல் – இலக்கியத் துறை நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 16, 2025

வயிற்றைக் காக்கும் நார்ச்சத்து

image

நாம் சாப்பிடும்போது, நமக்கு மற்றும் நமது உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா என இருவருக்கும் சேர்த்து ஊட்டச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் பழனிவேல் கூறுகிறார். அந்த பாக்டீரியாக்கள்தான் நமது செரிமான வேலையை எளிமையாக்கச் செய்து நமது ஆரோக்கியத்தை காப்பாற்றுபவை. நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக் கொண்டாலே நமது வயிறு ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார் மருத்துவர்.

News March 16, 2025

ஆற்றில் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்

image

ஜாம்பியா ஆற்றில் 5 கோடி லிட்டர் ஆசிட் கலந்ததால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. சீன காப்பர் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் ஆசிட், கழிவை சேமிக்க தடுப்பணை இருந்தது. அது உடைந்து ஆசிட், கைபூ ஆறில் கலந்துள்ளது. இதனால் அந்த ஆற்று நீரில் மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கின்றன. இந்த விவகாரத்தில் உதவும்படி நிபுணர்களுக்கு ஜாம்பியா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 16, 2025

நடிகை ‘பிந்து கோஷ்’ காலமானார்

image

பல நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நடிகை பிந்து கோஷ், சென்னையில் காலமானார். 1982ஆம் ஆண்டு வெளியான ‘கோழி கூவுது’ படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த இவர், தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், களத்தூர் கண்ணம்மா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர், ரஜினி, சிவாஜி ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

News March 16, 2025

திமுகவுக்கு ஆதரவாக பேசிய பிரேமலதா

image

திமுக அரசை கடுமையாக எதிர்த்து வந்த பிரேமலதா, தற்போது ஆதரவு கருத்துகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறியிருக்கும் அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசுடன் தேமுதிக இணைந்து போராடும் என்றும் கூறியுள்ளார். இதனால், அரசியலில் காற்றின் திசை திரும்புகிறதா என்று விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். உங்கள் கருத்து என்ன?

News March 16, 2025

இங்கிலாந்து டெஸ்டுக்கும் ரோஹித்தே கேப்டன்?

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும் ரோஹித் சர்மாவே கேப்டன் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆஸி. தொடரில் மோசமாக விளையாடியதால் விமர்சனத்துக்கு அவர் ஆளானார். இதனால் கடைசி டெஸ்டில் அவர் விளையாடவில்லை. விரைவில் தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவர் கேப்டனா, இல்லையா என கேள்வியெழுந்தது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ வட்டாரங்கள், கேப்டன்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது எனக் கூறின.

News March 16, 2025

ரூ.75 கோடி போதைப்பொருள்… சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!

image

கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு போலீஸ் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் 2 நைஜீரியப் பெண்கள். விமான நிலையத்தில் அவர்களிடம் நடத்திய சோதனையில், ரூ.75 கோடி மதிப்புள்ள 37 கிலோ MDMA போதைப்பொருள் சிக்கியுள்ளது. டெல்லியில் வசித்துவரும் அவர்கள், கடந்த ஒரு வருடத்தில் பெங்களூருவுக்கு 22 முறை, மும்பைக்கு 37 முறை பயணம் செய்துள்ளனர்.

error: Content is protected !!