news

News March 18, 2025

6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 23 வரை, TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல மார்ச் 21 வரை, வெப்ப நிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News March 18, 2025

போர்… டிரம்ப்-புதின் இன்று பேச்சுவார்த்தை

image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், USA அதிபர் டிரம்ப் இன்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, PM மோடி உள்பட பல நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், டிரம்ப்-புதின் ஆகியோரது இன்றைய சந்திப்பு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. போர் முடிவுக்கு வருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

News March 18, 2025

தினம் ஒரு ஜூஸ்… எப்போதும் ஃபிரஷ்

image

*பச்சை காய்கறி சாறு உடலுக்கு வலிமை தருவதுடன், புற்றுநோய் அபாயத்தை தடுக்கும்.
*மாதுளம் பழச்சாறு ரத்த சோகையை நீக்குவதுடன், உடலுக்கு உடனடி ஆற்றல் தரும்.
*நெல்லிக்காய் ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, செரிமானத்தைத் தூண்டும்.
*பன்னீர் திராட்சை ஜூஸ் உடலில் ஏற்படும் நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
*பிளம் ஜூஸ் வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும்.

News March 18, 2025

இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 18) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொதுத்தேர்வில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News March 18, 2025

67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை

image

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் புதிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (LTTE), லஷ்கர்-இ-தொய்பா, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை உள்ளிட்ட 67 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காகவும் மேற்கண்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

ரத்தத்தை சுத்தம் செய்ய சூப்பரான டிப்ஸ்…

image

*பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்க்கலாம்.
*இஞ்சி சாறுடன் தேன் கலந்து பருகலாம்.
*தர்ப்பைப் புல் கஷாயம் குடிக்கலாம்.
*அத்திப்பழம் தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியடைந்து உடல் பலம் பெரும்.
*வெந்தயம், பேரீச்சம்பழம், உருளைக் கிழங்கு, உலர் திராட்சை அடிக்கடி சாப்பிடலாம்.
*கீரை, முட்டை, சுண்டைக்காய், கிவி பழம், முழு தானியம் வெல்லம், ஈரல் ஆகியவை ரத்த சோகையை தடுத்து ரத்தத்தை சுத்திகரிக்கும்.

News March 18, 2025

புதினிடம் வலியுறுத்திய PM மோடி

image

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினை, PM மோடி வலியுறுத்தியதாக போலந்து வெளியுறவு அமைச்சர் டோபில் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட்டதற்காக PM மோடியை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

News March 18, 2025

மார்ச் 18: வரலாற்றில் இன்று!

image

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)

News March 18, 2025

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

image

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

News March 18, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 210
▶குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
▶பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.

error: Content is protected !!