news

News March 18, 2025

தமிழ்நாட்டை முந்தும் தெலங்கானா

image

தெலங்கானாவில் BC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 42%ஆக உயர்த்தி மசோதா நிறைவேற்றியிருக்கிறது அம்மாநில அரசு. இந்தியாவில் தமிழ்நாடு(69%) தவிர, எந்த மாநிலத்திலும் 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கிடையாது. அதனை முறியடிக்கும் வகையில், மொத்த இட ஒதுக்கீட்டை 70 சதவீதமாக உயர்த்தியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இதனை செய்திருக்கிறார்.

News March 18, 2025

அதனால்தான் அவர் தோனி: ஹர்பஜன்

image

40 வயதைத் தாண்டிய பிறகும், தோனி சிறப்பாக விளையாடுவதற்கு, கிரிக்கெட் மீதான அவரது ஈடுபாடுதான் காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வயதில் ஐபிஎல்லில் விளையாட ஃபிட்னஸ் வேண்டும் எனவும், அதற்கு தோனி கடுமையாக உழைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தினமும் 2-3 மணி நேரம் தோனி பேட்டிங் பிராக்டிஸ் செய்வதாகவும், அதுதான் மற்ற வீரர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News March 18, 2025

இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 100 பேர் பலி

image

காசா, லெபனான், சிரியா பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க மறுத்ததாகக் கூறி இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

News March 18, 2025

கிசுகிசுவை விட அதுதான் மறக்க முடியாத வலி: ஷாம்

image

சினிமாவில் நடிக்கத் தொடங்கியதும், தன்னைப் பற்றி கிசுகிசு வந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். ஆனால் அதைவிட, ஒரு இயக்குநர் செய்ததுதான், தன் வாழ்வில் மறக்க முடியாதது என அவர் கூறியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து ₹3.5 கோடி வாங்கி கொடுத்ததாகவும், அதில் ₹1.5 கோடியை இயக்குநர் வைத்துக் கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

News March 18, 2025

காய்கறிகளின் விலை குறைந்தது

image

வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது.
அவரை (கிலோ) ₹35, வெண்டை ₹35, பீன்ஸ் ₹30, பீட்ரூட் ₹35, பாகற்காய் ₹35, கத்தரிக்காய் ₹55, முட்டைக்கோஸ் ₹30, உருளைக்கிழங்கு ₹40, முருங்கைக்காய் ₹60, கொத்தமல்லி ₹40, புடலங்காய் ₹30, தக்காளி ₹15க்கும், பீர்க்கங்காய் ₹18, சுரைக்காய் ₹15, முள்ளங்கி ₹15, சின்னவெங்காயம் ₹36க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News March 18, 2025

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு: சிபிஐ விசாரிக்க தடை

image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பதவிக் காலத்தில் ஆவின் நிறுவனத்தில் ₹3 கோடி வரை முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கின் 400 பக்க ஆவணங்களை, மொழிபெயர்த்து தருமாறு ஆளுநர் கேட்பதாக உச்ச நீதிமன்றத்தில் TN அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் கேட்ட ஆவணங்களை 2 வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News March 18, 2025

மொத்த விலை பணவீக்கம் உயர்வு

image

நாட்டின் மொத்த விலை பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 2.38% ஆக உயர்ந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த ஜனவரி மாதத்தில் 2.31% ஆகவும், கடந்தாண்டு பிப்ரவரியில் 0.20% ஆகவும் இருந்தது. சமையல் எண்ணெய், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது. சமையல் எண்ணெய் 33.59%, குளிர்பானங்கள் 1.66% ஆகவும் உயர்ந்துள்ளன.

News March 18, 2025

அண்ணாமலைக்கு தவெக பதிலடி

image

லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக தவெக பதிலடி கொடுத்துள்ளது. மாநிலத் தலைவராக இல்லாவிட்டால், உங்களை மக்கள் கடுகளவும் மதிக்க மாட்டார்கள், கண்டுகொள்ளவும் மாட்டார்கள் . எத்தனை காலம் இது போல் பேசியும், சாட்டையால் அடித்தும் ஏமாற்றுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

News March 18, 2025

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர தடை!

image

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

News March 18, 2025

BREAKING: அதிகாலையில் மீனவர்கள் கைது

image

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அதிகாலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி விசைப்படகுடன் சிறை பிடிக்கப்பட்டனர். தொடரும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

error: Content is protected !!