news

News March 18, 2025

டிராகன் VS NEEK… ஓடிடியிலும் தொடரும் யுத்தம்!

image

பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படமும், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) படமும் பிப். 21-ல் திரையரங்குகளில் வெளியாகின. டிராகன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், NEEK படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. இந்நிலையில், மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் டிராகன் படம் வெளியாகும் அதே நாளில் NEEK படம் அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க ஃபேவரைட் படம் எது?

News March 18, 2025

நிர்வாணமாக நடித்தது ஏன்…. மனம் திறந்த சம்யுக்தா

image

‘சுழல் 2’ வெப்சீரிஸில் நிர்வாண காட்சிகளில் சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. இதுபற்றி கூறியுள்ள அவர், இந்த காட்சிகளில் நடிக்கும் முன், தன் தாயிடம் சொல்லி ஒப்புதல் பெற்றதாகவும், சிறையில் நடக்கும் சம்பவங்களை மிகவும் ராவாக இயக்குநர் படமாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் கட்டாயப் படுத்தவில்லை என்றும், கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

News March 18, 2025

10வது படித்திருந்தால் போதும்; ரூ.69,100 சம்பளம்!

image

சிஐஎஸ்எப் துணை ராணுவப் படையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ஆம் வகுப்பு முடித்து ஐடிஐ தேர்ச்சி, இதற்கு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: https://cisfrectt.cisf.gov.in/

News March 18, 2025

ஐபோனுக்கு போட்டியாக வரும் கூகுள் பிக்செல் 9a…!

image

ஐபோன் 16e-க்கு இணையான அம்சங்களுடன் கூகுள் பிக்செல் 9a மாடல் நாளை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், 48MP பின்பக்க கேமரா, 13MP செல்ஃபி கேமரா, 5,100mAh பேட்டரி திறன் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. மேலும், 8GB RAM, 256GB STORAGE, வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட சிறப்புகளும் உள்ளதாம். இதன் விலை ரூ.55,000 ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2025

அம்மாடியோவ் 52 முறை…. தங்க கடத்தல் வழக்கில் திருப்பம்!

image

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட வழக்கில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ரன்யா ராவ் 2 ஆண்டுகளில் 52 முறை துபாய் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது நண்பரும் நடிகருமான தருண் ராஜுடன் 26 முறை துபாய் சென்று தங்கம் கடத்தியதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக?

image

மாநிலங்களவை எம்பி சீட் தொடர்பாக வாக்குறுதி அளிக்கவில்லை என இபிஎஸ் கூறியதால் பிரேமலதா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பிரேமலதா பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2 விவகாரங்களையும் முடிச்சு போடும் கட்சியினர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருப்பதாகவும், 2 கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என்றும் சொல்கின்றனர்.

News March 18, 2025

கிளம்பிய கேது: கோடீஸ்வர யோகம் அடிக்கும் 3 ராசிகள்

image

கேது பகவான் உத்திரம் நட்சத்திரத்தின் 3ஆம் பாகத்தில் இருந்து 2ஆம் பாகத்திற்கு சென்றுள்ளார். இந்த இடமாற்றம் கடகம், சிம்மம், துலாம் ஆகிய ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப் போகிறது. வாழ்க்கையில் பல இனிய மாற்றங்கள் நிகழும். ஆரோக்கியம் மேம்படும். எதை தொட்டாலும் பண வரவு இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டநாள் கஷ்டங்கள் தீரும். முதலீடுகள் பெரும் லாபங்களை கொடுக்கும். குழந்தை யோகம் உண்டு.

News March 18, 2025

பெரியார் குறித்த பேச்சு: சீமான் மனு தள்ளுபடி

image

பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக சீமானுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்கு எண்களின் விவரங்கள் என்ன? உள்ளிட்ட எந்த தகவலும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

News March 18, 2025

என் வாழ்க்கை மாறிவிட்டது: ஹர்திக் பாண்ட்யா

image

ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, பின்னர் தூக்கியெறியப்பட்டவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போது ரசிகர்களின் அன்பை அவர் மீண்டும் பெற்றிருக்கிறார். இதுபற்றி பேசிய அவர், என்னை சுற்றி நடந்த தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாமல், கடினமாக உழைத்தேன். டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு, எனது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு எதிராக இருந்த ரசிகர்களின் அன்பு, எனக்கு மீண்டும் கிடைத்துள்ளது எனக் கூறினார்.

News March 18, 2025

ஆண் குழந்தைதான் வேணும்… கொடூரத் தாயால் விபரீதம்!

image

ராஜஸ்தானில் ஆண் குழந்தை பெறாத விரக்தியில், பிறந்து 17 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றத் தாயே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மன உளைச்சலில் இருந்த அந்த பெண், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பச்சிளம் குழந்தையை கொலை செய்துள்ளார். கணவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஆணோ, பெண்ணோ அனைவரும் சமம் என்பதை சமூகம் எப்போதுதான் உணருமோ?

error: Content is protected !!