news

News March 19, 2025

இன்று விற்பனை.. CSK மேட்ச் பார்க்க ரெடியா மக்களே?

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள CSK vs MI இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. காலை 10.15 மணிக்கு <>இங்கு<<>> க்ளிக் செய்து டிக்கெட் எடுக்கலாம். டிக்கெட்டின் விலை ₹1,700 முதல் ₹7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டை காண்பித்து சென்னை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 19, 2025

பிரபல இசையமைப்பாளர் ஆரேலியோ மார்டினெஸ் பலி

image

மத்திய அமெரிக்காவின் ரோட்டன் தீவில் நிகழ்ந்த <<15809134>>விமான விபத்தில்<<>> பிரபல இசையமைப்பாளர் ஆரேலியா மார்டினெஸ் (55) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கறுப்பினத்தில் பிறந்து கரிஃபுனா(Garifuna) இசைக் குழுவில் இணைந்து சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற மார்டினெஸ், அந்நாட்டின் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முகமாக இருந்தவர். மார்டினெஸ் மறைவுக்கு ஹோண்டுரான் ஜனாதிபதி சியோமாரா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

image

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இந்த 2 மாவட்டங்களிலும் சுமார் 1,25,000 விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 4 லட்சம் பேர் பாதிப்படைவதுடன், நாளொன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிப்பும், சுமார் ₹30 கோடி இழப்பும் ஏற்படும் என கூறப்படுகிறது.

News March 19, 2025

டாஸ்மாக் கூடுதல் தொகை வசூல் யாருக்கு செல்கிறது?

image

₹1000 கோடி <<15808812>>டாஸ்மாக் <<>>ஊழல் புகாரை அடுத்து, குவாட்டருக்கு ₹40 கூடுதலாக வசூலித்த விவகாரத்தையும் பாஜக அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து எச்.ராஜா, மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ₹40 என கணக்கிட்டால், அதில் மட்டும் மறைமுகமாக எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்?, அந்த பணம் யார் யாருக்கெல்லாம் செல்கிறது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 19, 2025

5 நிமிடம் சார்ஜ் செய்தால் 470KM பயணிக்கலாம்.. அசத்தும் BYD

image

சீன EV கார் தயாரிப்பு நிறுவனமான BYD, வணிக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம், தங்கள் காரை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 470KM தூரம் பயணிக்கலாம் என்கிறது. இதற்காக, சீனா முழுவதும் 4,000 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது போட்டியாளர்களான Tesla, Benzக்கு சவாலாக கருதப்படுகிறது.

News March 19, 2025

இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை: அரசு வார்னிங்

image

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

News March 19, 2025

சுனிதா, வில்மோர் நலமாக உள்ளதாக நாசா அறிவிப்பு

image

9 மாதங்களுக்கு பிறகு விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் நலமுடன் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

News March 19, 2025

சொன்னதை செய்த டிரம்ப் என வெள்ளை மாளிகை புகழாரம்!

image

சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் கொடுத்த வாக்குறுதியை டிரம்ப் நிறைவேற்றியுள்ளதாக வெள்ளை மாளிகை புகழாரம் சூட்டியுள்ளது. எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுக்கு நன்றி கூறியுள்ள வெள்ளை மாளிகை, பூமி திரும்பியுள்ள சுனிதா, வில்மோருக்கு உடல், மனரீதியாக தேவைப்படும் அனைத்தையும் நாசா ஏற்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

News March 19, 2025

சுனிதா, வில்மோருக்கு பூமியில் காத்திருக்கும் சவால்கள்

image

9 மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு பூமி திரும்பியுள்ள சுனிதா, வில்மோர் உடல் ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்த அழுத்த மாறுபாட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் பார்வைக் குறைபாடு, சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றை சந்திக்க நேரிடும் என்பதால் அவர்கள் தொடர் மருத்துவச் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் கூறி வருகின்றனர். மீண்டு வாருங்கள் வீரர்களே..!

News March 19, 2025

அக்னிவீர் படையில் சேர விருப்பமா? இதை செய்யுங்க

image

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் எனும் புதிய படைப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீரர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இந்திய ராணுவத்தின் இணையதளமான <>www.joinindianarmy.nic.in.<<>>இல் தொடங்கியுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, வயது தகுதி ஆகியவை அதே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10ஆம் தேதி கடைசி.

error: Content is protected !!