news

News March 19, 2025

கணவனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மனைவி

image

உ.பி.யில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்றுள்ளார். லண்டனில் வணிகக் கப்பலில் அதிகாரியான சவுரப், தனது மனைவி முஸ்கானின் பிறந்தநாளுக்காக இந்தியா வந்துள்ளார். இதனிடையே, காதலனுடன் உறவில் இருந்த முஸ்கான், கணவனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, காதலனுடன் சேர்ந்து சவுரப்பை கொன்று துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் வைத்து சிமெண்டால் மூடியுள்ளார். போலீசார் விசாரணையில் இக்கொடூரம் தெரியவந்துள்ளது.

News March 19, 2025

பதவிக்கு நெருக்கடி.. டெல்லி சென்ற செந்தில் பாலாஜி

image

அமைச்சர் செந்தில் பாலாஜி இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்ற அவர், சற்றுமுன் சென்னை திரும்பினார். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக EDயின் புகாரை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அவர் டெல்லி சென்றதாகத் தெரிகிறது.

News March 19, 2025

சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்

image

‘STR 49’ படத்தில் நடிக்க கயாடு லோஹர் கமிட்டாகி உள்ளார். ‘டிராகன்’ பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் கல்லூரி மாணவனாக சிம்பு நடிக்கிறார்.

News March 19, 2025

தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹320 உயர்வு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 19) சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,290க்கும், சவரன் ₹66,320க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

News March 19, 2025

பூட்டிய வீட்டுக்குள் இருந்த ₹100 கோடி!

image

குஜராத்தின் அகமதாபாத்தில் பூட்டிய வீட்டில் வைத்து தங்கக் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த வீட்டை திறந்து சோதனை செய்தபோது 87.9 கிலோ தங்கக் கட்டிகள், 19.6 கிலோ தங்க நகைகள் என ₹100 கோடி மதிப்பிலான பொருள்கள் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த மேக் ஷாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

News March 19, 2025

‘வீர தீர சூரன்’ கிராமத்து ஹாலிவுட் படம்: எஸ்.ஜே.சூர்யா

image

ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி கிராமத்தில் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ, அதேமாதிரி தான் ‘வீர தீர சூரன்’ படம் இருக்கும் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். ‘தூள்’ படத்தில் பார்த்ததைப் போன்று விக்ரமை இந்த படத்தில் நல்ல கமர்ஷியல் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் 2ஆம் பாகம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

News March 19, 2025

4 நாள்கள் தொடர் விடுமுறை!

image

இம்மாத இறுதியில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 ரம்ஜான் பண்டிகை (திங்கட்கிழமை), ஏப்ரல் 1 வங்கிக் கணக்கு முடிவு நாள் அரசு பொது விடுமுறை நாளாகும். இதனால், இப்போதே சோஷியல் மீடியாவில் இது குறித்த மீம்ஸ்கள் டிரெண்டாகத் தொடங்கியுள்ளன. இந்த விடுமுறையில் உங்க பிளான் என்ன?

News March 19, 2025

புடினுக்கு போன் போட்ட டிரம்ப்.. உக்ரைன் போர் நிறுத்தம்?

image

உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன், USA அதிபர் டிரம்ப் 2 மணி நேரம் போனில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உக்ரைனின் உள்கட்டமைப்புகள், ஆற்றல் மையங்களில் தாக்குதல் நடத்துவதை 30 நாள்கள் நிறுத்தி வைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், முழுநேர போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

News March 19, 2025

KKR vs LSG போட்டி மாற்றம்.. ஏன் தெரியுமா?

image

கொல்கத்தாவில் வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெற இருந்த KKR vs LSG ஐபிஎல் லீக் போட்டி மாற்றப்பட உள்ளது. அன்று ராமநவமி என்பதால், பாஜக சார்பில் 20,000 ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, போலீசாரால் போதிய பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதால், போட்டி மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து BCCIயிடம் தெரிவித்துவிட்டதாகவும் பெங்கால் கிரிக்கெட் அசோசியன் தலைவர் சிநேகாஷிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

ஒரே நாளில் 9,100 அட்மிஷன்

image

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், நேற்று ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை, மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 12 வேலை நாள்களில் மொத்தம் 81,797 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!