India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாஹல்- தனஸ்ரீ விவகாரத்து வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் கீழ், சமரச காலத்தை தள்ளுபடி செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்த தீர்ப்பை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. மேலும், சாஹல் ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டும் என்பதால், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கவும் ஆணையிட்டுள்ளது. கடந்த 2020ல் இவர்களுக்கு திருமணமானது.
தூத்துக்குடியில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. மாணவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது இருந்த நிலை மற்றும் தற்போதைய நிலை குறித்து ஹாஸ்பிடல் முதல்வரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். கடந்த 10ம் தேதி மாணவன் பொதுத்தேர்வு எழுத பேருந்தில் சென்றபோது, 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது.
ஹாலிவுட் பழம்பெரும் நடிகை கரோல் டி ஆண்ட்ரியா காலமானார். அவருக்கு வயது 87. 1957இல் வெளியான சூப்பர் ஹிட் படமான வெஸ்ட் சைட் ஸ்டோரியில் அவர் நடித்திருந்தார். இதையடுத்து, மேலும் பல ஹாலிவுட் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மேட் மேன் பட நாயகன் ராபர்ட் மோர்சை 1961இல் அவர் திருமணம் செய்தார். 1981இல் 2 பேரும் விவாகரத்து பெற்ற பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.
திமுக ஆட்சிக்கு தமிழ் கடவுள் முருகன் முழுவதுமாக ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகனுக்கு மாநாடு எடுத்த ஆட்சி இந்த திமுக ஆட்சிதான் எனக் கூறிய அவர், அறநிலையத்துறை மூலம் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்து 4 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது; எஞ்சிய 6 கல்லூரிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்தாண்டு இறுதிக்குள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
விண்வெளியில் சில உணவு வகைகளை நாசா தடை செய்துள்ளது. *பிரட்- புவியீர்ப்பு விசை இல்லாததால் இதன் துகள்கள் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *ஐஸ்க்ரீம்- இதை உறைய வைக்க அதிக மின்சாரம் தேவைப்படும். *மீன்- இதன் துர்நாற்றம் நீங்க நீண்டகாலம் ஆகலாம். *உப்பு, மிளகு- இதன் துகள்களும் காற்றில் பறந்து பிரச்னையை ஏற்படுத்தலாம். *மது- விண்வெளி வீரர்கள் மது போதையில் தொழில்நுட்ப தவறிழைக்க வாய்ப்புகள் உள்ளது.
புதுச்சேரியில் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு மாதம் வழங்கப்பட்டு வரும் ₹1,000, இனி ₹2,500 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் எந்த உதவியும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ₹1,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் MI விளையாடும் முதல் போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். கடந்த ஐபிஎல் சீசனின் கடைசி போட்டியில், MI அணி தாமதமாக ஓவர் வீசியதால், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்திய டி20 அணியை வழிநடத்தும் சூர்யாதான், MIஐ வழிநடத்த தகுதியானவர் என ஹர்திக் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். வரும் 23ஆம் தேதி MI vs CSK மோத உள்ளது.
விடாமுயற்சி என்றால் என்ன என்று சுனிதா வில்லியம்ஸ் மற்றும் Crew9 விண்வெளி வீரர்கள் உலகிற்கு காட்டிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர்களுடைய இந்த உறுதிப்பாடு லட்சக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கும் எனவும், தொழில்நுட்பமும் விடாமுயற்சியும் சேரும் போது என்ன நடக்கும் என அவர்கள் நிரூபித்துவிட்டதாகவும் பிரதமர் பாராட்டியுள்ளார். மேலும், அவர்களை பிரிந்து வாடிய பூமிக்கு நல்வரவு எனவும் வாழ்த்தியுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே 2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொடூரன் ஜெயபால், கடந்த 2019இல் தனது மனைவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். ஜெயபாலுக்கு ₹15,000 அபராதமும் விதித்துள்ள கோர்ட், சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
வரும் ஆண்டில் இருந்து ஒரு டன் கரும்புக்கு ₹4,000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். கரும்பு ஊக்கத்தொகை குறித்த அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், நிலுவையில் இல்லாமல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.