India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் CSK மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியை காண்பதற்கே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் 33 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், CSK 21 போட்டிகளில் வென்றுள்ளது. பெங்களூரு அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. பெங்களூரு அணிக்கு எதிராக CSK இந்த முறையும் வெற்று பெறுமா? கமெண்ட் பண்ணுங்க…
இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டியது போதாதென்று, தற்போது மீண்டும் ஒரு அராஜகத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிடிபட்ட 20 தெரு நாய்களை, அங்குள்ள மாநகராட்சி ஊழியர்கள், கன்னியாகுமரி எல்லையில் உள்ள கடச்சல் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இதனை கவனித்த பொதுமக்கள், அவர்களை போலீஸில் ஒப்படைத்த நிலையில், தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது முதல், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட MLAக்கள், சட்டசபையில் தனியே செயல்பட்டு வந்தனர். அவர்கள் அதிமுக MLAக்களுடன் இதுவரை சபையில் பேசாத நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இன்று அவைக்கு வந்த வைத்திலிங்கத்திடம், அதிமுக MLAக்கள் சகஜமாக பேசினார்கள். அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா? கமெண்ட் பண்ணுங்க…
கடந்த 10 ஆண்டுகளில் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, பதிவு செய்யப்பட்ட 193 வழக்குகளில் இரண்டில் மட்டுமே தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் ஹீரோவாக விஜய்யை உயர்த்தியதில் ‘பகவதி’ படத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மார்ச் 21ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. ரெடியா இருங்க ரசிகர்களே!
அயோத்தி ராமர் கோயில் 2024இல் மோடியால் திறக்கப்பட்டது. எனினும், அங்கு விடுபட்ட சில பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 96% பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய பணிகளை ஏப்ரல் 30க்குள் முடிக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதுவரை கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை பெற்ற அறக்கட்டளை, 5 ஆண்டுகளில் ரூ.2,150 கோடியை செலவிட்டுள்ளது. அத்துடன் அரசுக்கு ரூ.396 கோடி வரியையும் கட்டியுள்ளது.
நேற்று ரஷ்ய அதிபர் புதினிடம் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடினார். முன்னரே நேரம் குறிக்கப்பட்ட இந்த உரையாடலுக்கு, ட்ரம்பை, புதின் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்கு முன்னதாக புதின் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில், புதினின் செயலாளர் ட்ரம்பின் அப்பாயிண்ட்மென்ட் குறித்து கிண்டலடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் இதை கண்டுகொள்ளாதீர்கள், அவரது வேலையை அவர் செய்கிறார் என புதின் கூறுகிறார்.
கடைசி நேரத்தில் <<15812108>>RRB <<>>தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வர்களை அலைக்கழித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 1 முதல் சில அதிரடி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ளவுள்ளன. அந்த வகையில், GPAY, PHONEPE, PAYTM போன்ற UPI ஆப்களுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் நீண்டகாலமாக செயல்படாமல் இருந்தால், அந்த UPI கணக்குகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, UPI உடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்கள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாய்க்கடியால் உயிரிழப்பு ஏற்பட்டால், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நாய்க்கடியால் மாடு இறந்தால் ₹37,500, ஆடு இறந்தால் ₹6,000, கோழி இறந்தால் ₹200 இழப்பீடு வழங்கப்படும் என்றார். இதுவரை தெருநாய் கடித்து உயிரிழந்த 1,149 பிராணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
Sorry, no posts matched your criteria.