news

News March 19, 2025

தொடரும் GYM மரணங்கள்: மாரடைப்பால் இளைஞர் மரணம்

image

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஜிம் டிரெய்னர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். கணேஷ் ஷர்மா (26) என்ற அந்த இளைஞர், உடற்பயிற்சி செய்து விட்டு உடைமாற்றும் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. மற்றவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தார். உடலில் எந்த காயமும் இல்லை. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 19, 2025

IPLலின் கெத்து CSK.. யாரும் நெருங்க முடியாத சாதனை

image

IPL-லில் CSK-வுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதிகமுறை(10) இறுதிப் போட்டிக்கு சென்ற ஒரே அணி சென்னையே. 2008 – Runners, 2009 -Semi final, 2010 – Champion, 2011 – Champion, 2012 – Runners, 2013 – Runners, 2014 – Play offs, 2015 – Runners, 2016 – Suspend, 2017 – Suspend, 2018 – Champion, 2019 – Runners, 2020 – League, 2021- Champion, 2022 – League, 2023 – Champion, 2024 – League, 2025 – ?

News March 19, 2025

ரசிகர்களை குஷிப்படுத்தும் கார்த்திக் சுப்பராஜ்

image

சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் வரும் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் ஒவ்வொரு நகர்வையும் ஏற்கனவே கார்டூன் வடிவில் வெளியிட்டு அசத்தி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து படத்தின் 2ஆவது பாடலான கனிமா வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.

News March 19, 2025

மனைவி ஆபாச படம் பார்க்கலாமா? ஐகோர்ட் தீர்ப்பு

image

மனைவிக்கு தவறான நடத்தையால் அவருக்கு பால்வினை நோய் உள்ளது, அவர் தனிமையில் ஆபாசப் படம் பார்க்கிறார். இது தனக்கு இழைக்கும் கொடுமை என்று கூறி கணவர் விவாகரத்து கேட்டிருந்தார். இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட், ‘குற்றச்சாட்டுகளை மனுதாரர் நிரூபிக்கவில்லை. மேலும், மனைவி தனிமையில் ஆபாச படங்கள் பார்ப்பது, தனிநபராக அவரது உரிமை, இது கொடுமை இழைப்பதாகாது’ என்று தீர்ப்பளித்தது.

News March 19, 2025

இந்தியர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகள் எவை?

image

இந்தியர்கள் அதிகம் விரும்பி பயணிக்கும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 72 லட்சம் இந்தியர்கள் சுற்றுலாவுக்காக பயணம் மேற்கொள்கிறார்கள். இதற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா (31 லட்சம்) உள்ளது. மேலும், அமெரிக்கா (21 லட்சம்), தாய்லாந்து (15 லட்சம்), சிங்கப்பூர் (14 லட்சம்) உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் சுற்றுலாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறார்கள்.

News March 19, 2025

பிரேசில் பாஸ்கட்பால் ஜாம்பவான் காலமானார்

image

பிரேசில் நாட்டின் பாஸ்கட்பால் ஜாம்பவான்களில் ஒருவரான லாமிர் மார்கிஸ் (87) காலமானார். 1959, 1963ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை பாஸ்கட்பால் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றபோது, அந்த அணிகளில் மார்கிஸ் இடம்பெற்றிருந்தார். மேலும், 1960, 1964ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரேசில் நாடு வெண்கலம் வென்றபோதும் அந்த அணிகளில் அவர் இருந்தார்.

News March 19, 2025

PF பணத்தை முழுவதும் எடுக்க முடியுமா?

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கில் உள்ள பணம் முழுவதையும் ஓய்வு பெற்றதும் ஒரே முறையில் எடுத்து விட முடியும். அதுவரை பகுதியளவிலேயே பணத்தை எடுக்க முடியும். PF கணக்கு வைத்திருப்போர், ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்து அவரின் கணக்கில் பணம் செலுத்தப்படாது போகுமாயின் ஆன்லைன் அல்லது நேரில் விண்ணப்பித்து 75% பணத்தை எடுக்கலாம். எஞ்சிய தொகையை 2 மாதங்களுக்கு பிறகு எடுக்கலாம்.

News March 19, 2025

அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு ‘ஷாக்’ பதில்

image

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமக வலியுறுத்தி வரும் நிலையில், கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதா என அன்புமணி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய நிலையில், அவ்வாறு எந்த கோரிக்கையும் வரவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 19, 2025

3 ராசிகளை பணமழையில் குளிப்பாட்டும் ராகு!

image

ராகு பகவான் உத்தர பத்ரபாத நட்சத்திரத்தில் இருந்து பூரட்டாதி நட்சத்திரத்திற்கு இடம் மாறியதால் 3 ராசியினர் பணமழையில் நனையப் போகின்றனர். 1) ரிஷபம்: நிதி நிலைமை முன்னேறும். திருமணம், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 2) மகரம்: மன அழுத்தம் விலகி ஓடும். நீண்டகால சிக்கல்கள் தீரும். பணவரவு அதிகரிக்கும். 3) மீனம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்ட காரியம் துலங்கும். பொருளாதார நிலைமை மேம்படும்.

News March 19, 2025

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

image

*திருமணமாகாத பெண்களும் குழந்தையை தத்தெடுக்கலாம். *நிறுவனங்கள் 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய கட்டாய மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும். *யாரேனும் Stalking செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை. *பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், உடனடி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். *மாஜிஸ்திரேட் அனுமதி இல்லாமல், ஒரு பெண்ணை இரவிலோ, அதிகாலையிலோ கைது செய்ய முடியாது. *ஒரு ஆண் போலீஸ் ஒரு பெண்ணை உடல்ரீதியாக பரிசோதிக்க கூடாது.

error: Content is protected !!