India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரும்பாலானோர் தினமும் வெள்ளை அரிசி சாதத்தையே சாப்பிடுகிறார்கள். ஆனால், வெள்ளை சாதத்தை விட ப்ரவுன் அரிசியில் (பழுப்பு அரிசி) சமைக்கப்படும் சாதம் உடலுக்கு மிகவும் நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். இதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நார்ச்சத்து இருப்பதால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்த அழுத்தத்தையும், சர்க்கரையையும் குறைக்கிறது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை சிறையில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 110 பேர் உள்ளனர். சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், கைது நடவடிக்கைகளை தடுக்க கோரியும் பல முறை முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிவிட்டார். ஆனால் பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கவே இல்லை.
திருநெல்வேலியில் நேற்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில் ஜான் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் நடப்பதாகவும் x தளத்தில் அவர் விமர்சித்துள்ளார். காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் அதை பூட்டிவிட்டார்களா என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
➤மேஷம் – பக்தி ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – வரவு ➤கடகம் – துன்பம் ➤சிம்மம் – நிறைவு ➤கன்னி – பணிவு ➤துலாம் – சிரமம் ➤விருச்சிகம் – இரக்கம் ➤தனுசு – பிரீதி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நலம் ➤மீனம் – தொல்லை.
2008- 2024 வரையிலான ஐபிஎல்லில் அதிக கேட்ச் பிடித்த வீரர் யார் என பார்க்கலாம். ஆர்சிபி வீரர் விராட் கோலியே இந்த சாதனையை படைத்துள்ளார். 252 போட்டிகளில் விளையாடி 114 கேட்ச்களை அவர் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, EX சிஎஸ்கே வீரர் ரெய்னா 205 போட்டிகளில் விளையாடி 109 கேட்ச்களை பிடித்துள்ளார். பொலார்ட், ரவீந்திர ஜடேஜா தலா 103 கேட்ச்களையும், ரோஹித் சர்மா 101 கேட்ச்களையும் பிடித்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக பிஹாரில் 33.8% மக்கள் வறுமையில் வாழ்வதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்கண்ட் 28.8%, மேகாலயா 27.8%, உ.பி.22.9%, ம.பி.20.6%, ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதேபோல், வறுமையில் வாழும் மக்கள் குறைவாக (5%-க்கும் குறைவு) உள்ள மாநிலங்கள் பட்டியலில், முதலிடத்தில் கேரளா 0.6% உள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (2.2%) உள்ளது.
பூமி மணிக்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. அப்படி இருக்கையில், பூமியில் இருக்கும் நாம் ஏன் கீழே விழாமல் அப்படியே இருக்கிறோம் என்பதற்கு அறிவியல் பூர்வமாக விடை அளிக்கப்பட்டுள்ளது. பூமியானது மனிதர்கள், செடி கொடிகள் உள்ளிட்ட அனைத்துடனும் சேர்ந்தே சுற்றுகிறது. இதனால்தான் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும், கீழே விழாமலும் இருக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட் வில்லன் நடிகரான மகேஷ் ஆனந்த், அமிதாப் பச்சன், அக்சய்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நைட் கிளப்பில் உண்மையில் அக்சயுடன் கைகலப்பிலும் ஈடுபட்டார். நடிகை ரீனா ராணியின் சகோதரி பார்கா ராய், ரஷ்ய பெண் உள்ளிட்ட 5 பேரை திருமணம் செய்தும் மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. 57 வயதாகையில் 2019இல் அவர் உயிரிழந்தார். கடைசி காலத்தில் வறுமையில் வாழ்க்கையை கழித்தார்.
பர்ஸில் சில பொருட்களை வைத்திருப்பதன் மூலம் பணம் கொட்டும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) லட்சுமி குபேர எந்திரத்தை மஞ்சள் துணியில் சுற்றி பர்ஸில் வைக்க வேண்டும். 2) அட்சதையை வைக்க வேண்டும். 3) கோமதி சக்கரத்தை வைக்கலாம். 4) வெள்ளி நாணயத்தை பச்சை பாலில் சில நிமிடம் வைத்திருந்து, அதனை சுத்தமான துணியால் துடைத்து மஞ்சள், குங்குமம் இட்டு வைக்கலாம். 5) தாமரை விதையை வைக்கலாம்.
2025ம் நிதியாண்டில் மார்ச் மாதம் 16ஆம் தேதி வரையிலும், மத்திய அரசுக்கு நேரடி வரி மூலம் ரூ.21.26 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த வரிவருவாய் கடந்த நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் ரூ.18.80 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 13% அதிகம் ஆகும். இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் நேரடி வரி மூலம் ரூ.22.4 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.