news

News August 18, 2025

11 விநாயகர் சபை இருக்கும் அதிசய கோயில்!

image

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வாசீஸ்வரர் திருத்தலத்தில் ‘11 விநாயகர் சபை’ உள்ளது. புராணங்களின்படி, திரிபுராந்தர்களை அழிக்கச்சென்ற சிவன், விநாயகரை வணங்காமல் புறப்பட்டதால், வழியில் தேர் சக்கரத்தின் அச்சு முறிந்தது. விநாயகர் சபை அமைத்தும் விசாரணை மேற்கொண்டாராம். அதனடிப்படையில்தான், இங்கு 11 விநாயகர் சபை உள்ளது. இக்கோயிலில் வந்து வழிபட்டால், வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

News August 18, 2025

மிஸ்ஸான ஹாலிவுட் வாய்ப்பு: ஃபஹத் சொன்ன காரணம்

image

ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் இயக்குநர் Alejandro González Iñárritu-வின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஃபஹத் பாசில் பேசியுள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தான் வீடியோ காலில் ஆடிஷன் செய்தபோதே அவருக்குப் பிடிக்கவில்லை என்றார். இதற்கு தனது ஆங்கில உச்சரிப்பே காரணம் என்ற அவர், சம்பளமே இல்லாமல் 4 மாதங்கள் USA-ல் இருக்கச் சொன்னதால், அப்படத்தை கைவிட முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

News August 18, 2025

அதிமுக கூட்டணியில் தமமுக இணைந்தது.. ஜான்பாண்டியன்

image

பாஜக – அதிமுக (NDA) கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்துவிட்டதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என முன்னர் கூறிவந்தார். சமீபத்தில் நெல்லைக்கு சென்ற EPS உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், NDA கூட்டணியில் இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார்.

News August 18, 2025

நாடகம் நடத்தும் காங்கிரஸ்: ஜி.கே.வாசன் தாக்கு

image

வாக்கு திருட்டு விவகாரத்தில் காங்., கடந்த ஒருவாரமாக EC-க்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜி.கே.வாசன், EC-ஐ காங்., கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்; பொய்யை தொடர்ந்து கூறினால் உண்மையாகிவிடும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று விமர்சித்துள்ளார். மேலும், காங்., கூட்டணி பலவீனமாக உள்ளதால், அதனை மூடி மறைக்க ஒரு மிகப்பெரிய நாடகம் நடத்தப்படுவதாகவும் சாடினார்.

News August 18, 2025

கை மார்புக்கு வலு சேர்க்கும் சதுரங்க தண்டாசனம்!

image

✦கைகள், தோள்கள், மார்பு, மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
➥தரையில் குப்புற படுத்து கொள்ளவும். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகளில் அழுத்தம் கொடுத்து, கால் & மார்பை தரையில் படும்படி கீழிறக்கவும்.
➥பிறகு, கால் தரையில் இருக்க, மேல் உடம்பை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் 15- 20 விநாடிகள் இருந்து விட்டு, பிறகு கால்களையும் உடலுக்கு நேராக இருக்கும் படி உயர்த்தவும்.

News August 18, 2025

திமுக எதிர்கட்சியாக கூட வரக்கூடாது: அன்புமணி

image

வரும் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பது தான் தனது ஆசை என அன்புமணி தெரிவித்துள்ளார். பர்கூரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் 350 சாதிகள் உள்ளன. அதில் எந்தெந்த சாதிகள் இன்னும் முன்னேறவில்லை, யார் எல்லாம் பின்தங்கிய நிலையில் உள்ளனர், கல்வியறிவு முழுமையாக பெற்றிருக்கிறார்களா என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமென்றார்.

News August 18, 2025

தீபாவளி முன்பதிவு… இன்று காலை 8 மணிக்கு ரெடியா..!

image

தீபாவளி அக். 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் புக்கிங் இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, அக்.17-ம் தேதிக்கான டிக்கெட்டை இன்றும், அக்.18-ம் தேதிக்கான டிக்கெட் நாளையும், அக்.29-ம் தேதிக்கு வரும் 20-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெடியா நண்பர்களே!

News August 18, 2025

ஆசியக் கோப்பை அணியில் பும்ரா தேர்வாக வாய்ப்பு

image

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ளது. அணியில் இடம்பெற தான் தயாராக இருப்பதாக <<17431264>>பும்ரா<<>> தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024-ல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி தான் அவர் கடைசியாக விளையாடிய டி20 போட்டியாகும். ஆகையால் சுமார் 1 வருடத்துக்கு பின்னர் அவர் டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 18, 2025

பாஜக எதிர்பார்க்கும் தொகுதிகள் எத்தனை?

image

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளை குறிவைத்துள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிபெற வாய்ப்புள்ள 35 தொகுதிகளை பாஜக தேர்வு செய்துள்ளதாம். இம்மாத இறுதியில் மீண்டும் தமிழகம் வரும் பாஜக அமைப்பு பொ.செ., பிஎல் சந்தோஷ் இதுபற்றி EPS-யிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி எண்ணிக்கையை இறுதி செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தமுறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4-ல் வென்றது.

News August 18, 2025

CPR-யை பாஜக தேர்வு செய்தது ஏன்? பின்னணியில் புது கணக்கு

image

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக CP. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை கணக்கிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொங்கு பகுதிக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை மக்கள் மனதில் பதியவைத்தால், இப்பகுதியில் ஏற்கனவே வலுவாக உள்ள அதிமுக, பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!