India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காபி உற்பத்தியில் உலகிலேயே 7ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. உற்பத்தி குறைவு, பழைய ஸ்டாக்குகளை விற்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜனவரி மாதம் காபி கொட்டைகளின் ஏற்றுமதி 10% வரை வீழ்ச்சி கண்டது. தற்போது உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், ஏற்றுமதி 43.37% வரை அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆவின் பூத்களில் பால் விநியோகிக்கும் நேரத்தை மாற்றி அமைத்துள்ளதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதிகாலை 5 மணி- 6 மணி வரை பெண்கள் பால் வாங்கச்சென்றால், ‘கல்ப்ரிட்ஸ்’ வருவதாகவும், அந்த நேரத்தில் முகமும் தெரியாது எனவும் கூறியுள்ளார். இதனால், எந்த இடையூறும் இல்லாமல் பெண்கள் பால் வாங்குவதற்காக, காலை 6.30- 7.30 மணி வரை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21) முதல் ஏப்.21 ஆம் தேதி வரை <
ஏப்.1ம் தேதி முதல் புதிய TDS விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ₹1 லட்சம் வரை இருந்தால், அவர்களின் FD & RDக்கு TDS பிடித்தம் செய்யப்படாது. தற்போது அது ₹50,000ஆக உள்ளது. 60 வயதிற்கு உட்பட்டவர்கள் எனில், FD & RDக்கான வட்டி வருமானம் ₹50,000 தாண்டவில்லை என்றால், TDS பிடித்தம் செய்யப்படாது. காப்பீட்டு முகவர்களின் ஆண்டு கமிஷன் ₹20,000க்கு மேல் இருந்தால் TDS பொருந்தும்.
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் தப்பியோடிய கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். 27 கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய கைதி ஸ்டீபன் போலீசாரின் பிடியிலிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை, காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப்பிடித்த நிலையில், காலில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்கட்டமைப்புகள், ஆற்றல் மையங்களில் 30 நாள்கள் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்திற்கு உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது. டிரம்ப் நேற்று ரஷ்ய அதிபர் புடினுடன் பேசிவிட்டு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசி இருநாடுகளையும் சம்மதிக்க வைத்துள்ளார். இருப்பினும், எப்போது இது அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்த வார இறுதியில் சவுதி அரேபியாவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நடிகை பிரியங்கா சோப்ரா, விசாகப்பட்டினம் ஏர்போர்ட் செல்லும் வழியில், ரோட்டில் ஒரு பெண்ணிடம் கொய்யா பழங்களை வாங்கியுள்ளாராம். ஒரு கிலோ ₹150 என அந்த பெண் சொல்ல, இவர் ₹200ஐ நீட்டி மீதியை வைத்துக் கொள்ள சொல்லி இருக்கிறார். ஆனால், அதை அப்பெண் மறுத்து, மீதி காசுக்கு சில கொய்யா பழங்களை கொடுத்துள்ளார். நேர்மையின் அடையாளமான அப்பெண், தனது இதயத்தை வென்றதாக இன்ஸ்டாவில் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
கோடைக் காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, Aspirin, paracetamol மாத்திரைகளை டாக்டர் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மயக்கம், உடல்சோர்வு, தலைவலி ஏற்பட்டால், டாக்டரை சந்திக்க வேண்டும். வெப்ப வாத பாதிப்பை, காய்ச்சல் என நினைத்து, Aspirin, paracetamol மாத்திரைகளை உட்கொண்டால், ஆபத்தான எதிர்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற புதிய பேரிடர்களை சேர்க்க வேண்டும் என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசித்து பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கும் வழிமுறையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.