news

News March 17, 2024

IPL போட்டியில் அதிகம் முறை ரன் அவுட்டான வீரர்கள்

image

▶ரோஹித் – 11 முறை – 243 போட்டிகள்
▶வேணுகோபால் ராவ் – 11 முறை – 65 போட்டிகள்
▶யூசுப் பதான் – 11 முறை – 174 போட்டிகள்
▶முரளி விஜய் – 12 முறை – 106 போட்டிகள்
▶தினேஷ் கார்த்திக் – 14 முறை – 242 போட்டிகள்
▶வில்லியர்ஸ் – 14 முறை – 184 போட்டிகள்
▶அம்பத்தி ராயுடு – 15 முறை – 204 போட்டிகள்
▶ரெய்னா – 15 முறை – 205 போட்டிகள்
▶காம்பீர் – 16 முறை – 154 போட்டிகள்
▶ஷிகர் தவான் – 16 முறை – 217 போட்டிகள்

News March 17, 2024

24 மணி நேர கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

image

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித் துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியினரோ வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், tn.electioncomplaints2024.income.gov.in என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.

News March 17, 2024

எங்களுக்குத் திருமணம் ஆகவில்லை

image

நடிகர் பிரித்விராஜ் உடனான பிரிவு குறித்து, அவரது காதலி ஷீத்தல் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “பலரும் என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பிருத்வியும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால், இப்போது பிரிந்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

News March 17, 2024

BREAKING: 2ம் கட்ட தேர்தல் பத்திர விவரம் வெளியீடு

image

2ஆம் கட்ட தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் வசூலித்த நன்கொடை விவரங்களை சீலிட்ட உரையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி அண்மையில் தாக்கல் செய்தது. அதில் சில பகுதிகள், கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டன. இதையடுத்து 2வது கட்ட விவரங்களை தனது இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது.

News March 17, 2024

அணியில் இணைந்தார் ஷ்ரேயஸ் ஐயர்

image

2024 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அணியில் இணைந்துள்ளார். முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அவர், தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரில் மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் பரவி வந்தன. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News March 17, 2024

மார்ச் 19, 20ல் தேமுதிக விருப்ப மனு

image

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19, 20ஆம் தேதிகளில் விருப்பமனு பெறலாம் என பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News March 17, 2024

ஒரு நாளைக்கு இரு தொகுதிகள் பிரச்சாரம்!

image

தமிழகத்தில் ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரின் பிரச்சாரத் திட்டம் தயாராகி உள்ளது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளை 20 நாட்களில் கவரும் வகையில், ஒரு நாளைக்கு இரு தொகுதிகள் வீதம் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 22 திருச்சியில் இருந்து பிரச்சாரம் தொடங்க உள்ளது. ஏப்.7ல் I.N.D.I.A கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

News March 17, 2024

ஒரே கட்ட வாக்குப்பதிவில் அரசியல்

image

தேர்தல் ஆணையத்தை நம்பி நாங்கள் களமிறங்கவில்லை. மக்களை நம்பி தான் களமிறங்குவதாக விசிக எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். உ.பி., மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் 3 – 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் ஒரே கட்ட வாக்குப்பதிவில் அரசியல் உள்ளீடு உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கும், 7ம் கட்ட வாக்குப்பதிவுக்கும் பெரும் இடைவெளி உள்ளதாகவும் சாடினார்.

News March 17, 2024

‘GOAT’ படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல்?

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘GOAT’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரியைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகவும், த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாடல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News March 17, 2024

சற்றுமுன்: தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எம்.பி., எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டதால், புதிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது. எந்தவொரு திட்டங்களையும் தங்கள் தொகுதிகளில் தொடங்கக்கூடாது என அறிவுறுத்திய தேர்தல் ஆணையம், தொகுதிகளில் ஏற்கெனவே தொடங்கி நடைபெறும் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!