news

News March 20, 2024

வாரிசுகள் மோதும் களமான தென் சென்னை

image

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசின் மூத்த சகோதரியான தமிழச்சி தங்கப்பாண்டியன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2024இல் தென் சென்னையில் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் வாரிசான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ.ஜெயவர்த்தனாவை எதிர்த்து 2ஆவது முறையாக போட்டியிடவுள்ளார்.

News March 20, 2024

நீட் தேர்வு குறித்து 2வது முறையாக திமுக வாக்குறுதி

image

கடந்த தேர்தலைப் போல இந்த முறையும், நீட் தேர்வு ரத்து குறித்து தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வென்றால் நீட் உடனடியாக ரத்து செய்யப்படும் என வாக்குறுதியளித்தது. எனினும் தமிழ்நாட்டுக்கு இதுவரை விலக்கு கிடைக்கவில்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், 2வது முறையாக தற்போது தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

News March 20, 2024

BREAKING: திமுகவில் 11 புதுமுகங்கள்

image

மக்களவைத் தேர்தலில் திமுகவில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. பொள்ளாச்சி – கே.ஈஸ்ரவசாமி 2. தென்காசி – ராணிஸ்ரீகுமார் 3. தஞ்சாவூர் – முரசொலி 4. தருமபுரி – ஆ.மணி 5. சேலம் – செல்வகணபதி 6. ஈரோடு – கே.பிரகாஷ் 7.கள்ளக்குறிச்சி – மலையரசன் 8. கோவை – கணபதி 9. தேனி – தங்க தமிழ்செல்வன் 10. ஆரணி – தரணிவேந்தன் 11. பெரம்பலூர் – அருண்நேரு

News March 20, 2024

தேசிய ஊரக வேலை நாள் எண்ணிக்கை உயர்த்தப்படும்

image

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ” வேலை நாள் எண்ணிக்கை 100-இல் இருந்து150-ஆக உயர்த்தப்படும். ஊதியமும் ரூ.400-ஆக உயர்த்தப்படும். ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2024

மகனுக்கு மீண்டும் சீட் வாங்கிய ஜெயக்குமார்

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெ. ஜெயவர்த்தன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். முன்னதாக 2014 (வெற்றி), 2019 (தோல்வி) தேர்தல்களில் தென் சென்னையில் போட்டியிட்ட அவர், தற்போது 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். 2014 இல் ஜெயவர்த்தன் தனது 26 வயதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் இளைய எம்.பி என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News March 20, 2024

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது

image

I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது என்று திமுக உறுதியளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், “எங்கள் கூட்டணி அரசு அமைந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2024

சென்னையில் 3வது ரயில் முனையம்

image

சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் முழுவதும் அகற்றப்படும். ரயில்வே துறையில் கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும். விமானக் கட்டணம் முறைப்படுத்தப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

News March 20, 2024

சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படும்

image

I.N.D.I.A. கூட்டணி அரசு மத்தியில் அமைந்தால், சமையல் சிலிண்டர் விலை ரூ.500ஆக குறைக்கப்படுமென திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில், திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். வங்கியில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் பிடிக்கப்படும் அபராதம் ரத்து செய்யப்படும். பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 20, 2024

நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து

image

நாடு முழுவதும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் விளை பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவு +50% லாபம் என்பதை வலியுறுத்தி குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும். ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 361 நீக்கப்படும். முதல்வர்களின் ஆலோசனைப்படி ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

News March 20, 2024

புது முகங்களை களமிறக்கிய அதிமுக

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று வெளியிட்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் முதல் பட்டியலில் 16 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஜெயவர்த்தன், ராயபுரம் மனோகரன் தவிர்த்து மற்ற 14 பேரும் புது முக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 3 மருத்துவர்கள், 2 பொறியியலாளர்கள், 3 வழக்குரைஞர்கள், ஒரு முனைவர் என 16 பேரும் ஒன்றுக்கு மேற்பட்ட பட்டயங்களை பெற்ற நன்கு படித்த பட்டதாரிகளாக உள்ளனர்.

error: Content is protected !!