news

News March 21, 2024

தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும்

image

தோனி மேலும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. அவர் மேலும் 5 ஆண்டுகளோ அல்லது 2-3 ஆண்டுகளோ கிரிக்கெட் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

இலவச அறிவிப்பு வழக்கு இன்று விசாரணை

image

தேர்தல் பிரசாரத்தில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிரான மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

News March 21, 2024

தாமரை சின்னத்தில் போட்டி என அறிவித்தார்

image

ஓபிஎஸ் அணி, தமாகா தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை பாஜக நிறைவு செய்துள்ளது. அந்தவகையில், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேவநாதன் யாதவ் கூறும்போது, தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம் என்றும் கூறினார்.

News March 21, 2024

ரஷ்யாவில் போர் வேண்டாமென எழுதிய பெண்ணுக்கு சிறை

image

ரஷ்ய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்குச்சீட்டில் போர் வேண்டாமென சிவப்பு மையில் எழுதிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், ராணுவத்தை இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டதாக அலெக்ஸாண்ட்ரா சிரியாட்டியேவா மீது குற்றம்சாட்டிய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம், 8 நாள்கள் சிறையுடன், 40,000 ரூபிள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

News March 21, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ➤பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ➤ திருச்சியில் நாளை (மார்ச் 22) மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்குகிறார். ➤குஜராத் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார்.

News March 21, 2024

முதல்நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 22 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் நாள் வேட்புமனு செய்தவர்களில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் அடங்குவர். ஆனால் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

News March 21, 2024

10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டு பிச்சை எடுக்கிறார்

image

10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே நம்ம நாட்டில் குனிந்து, குனிந்து ஓட்டு பிச்சை எடுத்துக்கொண்டு இருக்காரென நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிட வேட்புமனு செய்த பின்னர் பேசிய அவர், ‘பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி சின்னமாக கேட்டுள்ளேன். லாரிக்கு தூய தமிழில் சரக்கு உந்து சின்னம் கேட்டுள்ளேன். சரக்கு உந்து என்றால் அந்த சரக்கு இல்லை’ என்றார்.

News March 21, 2024

குஜராத் அணியில் ஷமிக்கு பதிலாக சேர்ந்த சந்தீப் வாரியர்!

image

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஷமிக்கு பதிலாக தமிழக அணி வீரர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வில் இருக்கும் ஷமி, ஐ.பி.எல் தொடரிலிருந்தும் விலகினார். இதனையடுத்து அவருக்குப் பதிலாக சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர், ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழக அணிக்கு விளையாடினார்.

News March 21, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶மார்ச் 21 ▶பங்குனி – 8 ▶கிழமை: வியாழன் ▶ திதி: துவாதசி ▶நல்ல நேரம்: காலை 10.30 – 11.30 ▶கெளரி நேரம்: காலை 12.30 – 01.30, மாலை 06.30 – 07.30 ▶ராகு காலம்: மதியம் 01.30 – 03.00 ▶எமகண்டம்: காலை 06.00 – 07.30 ▶குளிகை: காலை 9.00 – 10.30 ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News March 21, 2024

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா?

image

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்.எல்.ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குமாறு முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க, ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!