news

News March 21, 2024

பிரபல நடிகைக்கு எதிராக போலீசில் புகார்

image

சுந்தரா டிராவல்ஸ் நாயகி ராதா, இளைஞரை கடுமையாகத் தாக்கியதாக போலீசில் ஒருவர் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தை சேர்ந்த ரிச்சர்ட், ராதாவை கிண்டல் செய்ததாகவும், ராதா வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவை ரிச்சர்டின் உறவினர் உடைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்தநிலையில், ரிச்சர்டை, ராதாவும், அவரின் மகனும் தாக்கியதாக ரிச்சர்டின் தந்தை புகார் அளித்துள்ளார்.

News March 21, 2024

தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்?

image

தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டனாக போவது யார் என ரெய்னா கேள்வியெழுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தோனிக்கு பின் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார் என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுகிறது. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், ஆலோசகராகவோ, வேறு ஏதாவது ஒரு வகையிலோ பங்களிப்பை வழங்குவார். என்னை கேட்டால் ருதுராஜ் கெய்க்வாட்டே, கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

News March 21, 2024

தேர்தல் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு

image

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு ரூ.50 லட்சம் ஆயுள் காப்பீடு செய்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய, தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இ.டி.சி வழங்கி, பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

News March 21, 2024

ஐபிஎல் போட்டிகள் நாளை தொடக்கம்

image

ஐபிஎல்தொடர், சென்னையில் நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் இத்தொடர் ஆரம்பமாகிறது. இதையடுத்து இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. ஐபிஎல் தொடக்க போட்டிகள், சென்னையில் நடைபெறுவது இது 5ஆவது முறையாகும். ஏற்கனவே 2011, 2012, 2019 & 2021ஆம் ஆண்டுகளில் நடந்துள்ளது.

News March 21, 2024

இதுவரை ஒரு இந்தியர் கூட வசிக்காத நாடுகள் அறிவோமா?

image

உலகில் உள்ள 195 நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர். ஆனால் ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் நகரம், தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள பல்கேரியா, நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள துவாலு என்றழைக்கப்படும் எல்லீஸ் தீவுகள் ஆகிய நாடுகளில் தூதரக அதிகாரிகள், கைதிகள் தவிர்த்து, எந்தவொரு இந்தியரும் இதுவரை குடியேறியதில்லையாம்.

News March 21, 2024

திருஷ்டி தோஷம் போக்கும் நல்லெண்ணெய்

image

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் எனப் பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்க, ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் முகம் பார்த்து, பெயரைச் சொல்ல வேண்டும். பின்னர் அதனை தானமாக கொடுத்ததால் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.

News March 21, 2024

தோனி மேலும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும்

image

தோனி மேலும் 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட வேண்டுமென்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. இதுகுறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், “தோனிக்கு தற்போது 43 வயதாகிறது. அவர் மேலும் 5 ஆண்டுகளோ அல்லது 2-3 ஆண்டுகளோ கிரிக்கெட் விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

News March 21, 2024

இலவச அறிவிப்பு வழக்கு இன்று விசாரணை

image

தேர்தல் பிரசாரத்தில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிரான மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

News March 21, 2024

தாமரை சின்னத்தில் போட்டி என அறிவித்தார்

image

ஓபிஎஸ் அணி, தமாகா தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை பாஜக நிறைவு செய்துள்ளது. அந்தவகையில், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தேவநாதன் யாதவ் கூறும்போது, தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கேட்டுள்ளதாகவும், தாமரை சின்னத்தில் தான் போட்டியிடுகிறோம் என்றும் கூறினார்.

error: Content is protected !!