news

News March 18, 2024

ரோஹித் ஷர்மாவுடன் இதுவரை பேசவில்லை

image

மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோஹித் ஷர்மாவுடன் இதுவரை பேசவில்லை என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ” என் வாழ்நாளில் பெரும் பகுதி ரோஹித் தலைமையின் கீழ் விளையாடி உள்ளேன். அவரின் அனுபவம் மும்பை அணிக்கு மேலும் பலம் சேர்க்கும். அவரோடு இணைந்து பணியாற்ற எனக்கு எவ்வித சிரமமும் இல்லை. அவருடன் இணைந்து பணியாற்றி கோப்பையை வெல்வதே நோக்கம்” என்றார்.

News March 18, 2024

சற்று நேரத்தில் வருகிறார் மோடி

image

தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் இன்று சாலைப் பேரணியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5.30 மணியளவில் விமானம் மூலம் கோவை வரும் அவர், சாய்பாபா காலனியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை பேரணியாக செல்கிறார். வழி நெடுகிலும் அவரை வரவேற்க பாஜக தொண்டர்கள் பூக்களுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம், எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் #GoBackModi என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.

News March 18, 2024

பெங்களூரு வந்தடைந்தார் விராட் கோலி

image

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

News March 18, 2024

காங்கிரஸ் கட்சி உத்தேச பட்டியல்

image

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸூக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1) குமரி- விஜய் வசந்த், 2) விருதுநகர்- மாணிக்கம் தாகூர், 3) சிவகங்கை – கார்த்திக், 4) கரூர் – ஜோதிமணி, 5) திருவள்ளுர்- சசிகாந்த் & விஸ்வநாதன், 6) மயிலாடுதுறை- பிரவின் சக்ரவர்த்தி , 7) கிருஷ்ணகிரி – செல்லகுமார், 8) கடலூர்- அழகிரி, 9) நெல்லை- பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

News March 18, 2024

OnThisDay: சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி

image

2012 இதே நாளில் நடந்த சச்சினின் கடைசி ஒருநாள் போட்டியை நம் யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சச்சின் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் அவரது ஒருநாள் பயணம் முடிவடைந்தது. அந்தப் போட்டியில், கோலி 183* ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

News March 18, 2024

கூட்டணி குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூடியது

image

மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, பேரா. தீரன், வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டணி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 18, 2024

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், CPI-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஏற்கெனவே திருப்பூர் MP-யாக உள்ள கே.சுப்பராயன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, நாகை தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் நாகை வேட்பாளராக மா.செல்வராசு போட்டியிட்டார்.

News March 18, 2024

திமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் (1)

image

திமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வ.சென்னை – கலாநிதி வீராசாமி, தெ.சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், ம.சென்னை – தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் – செல்வம், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர் ஆனந்த், தருமபுரி – செந்தில்குமார், திருவண்ணாமலை – அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி – கெளதம சிகாமணி உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

News March 18, 2024

திமுக உத்தேச வேட்பாளர் பட்டியல் (2)

image

சேலம் – செல்வகணபதி, நீலகிரி – ஆ.ராசா, தஞ்சாவூர் – மாணிக்கம், தூத்துக்குடி – கனிமொழி, தென்காசி – தனுஷ், தேனி – தமிழ்ச்செல்வன், ஆரணி – தரணிவேந்தன், கோவை – மகேந்திரன், பொள்ளாச்சி – சண்முகசுந்தரம், ஈரோடு – பிரகாஷ், பெரம்பலூர் – அருண் நேரு உள்ளிட்டோர் திமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

News March 18, 2024

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ரீ-ரிலீஸ் ஆகிறது

image

தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை, மீண்டும் ரிலீஸ் செய்யும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படம் வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

error: Content is protected !!