India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 57,327 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அட்டை(Smart Card) அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் 18,09,607 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், 1,67,795 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்றும் கூறினார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் திருவிழா நாளை முதல் தொடங்குகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் தெரியுமா? மொத்தமாக ₹20 கோடி. 2 ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ₹13 கோடி வழங்கப்படும். 3 மற்றும் 4 ஆம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே
₹7 கோடி, ₹6.5 கோடி பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை சோஷியல் மீடியாவில் மீண்டும் வலுத்துள்ளது. லண்டனில் சிம்பொனி அரங்கேற்றிய அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. இந்நிலையில், இசை ரத்னாவை கவுரவிக்கும் வகையில் இசைஞானிக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுங்கள் எனப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ஜொமேட்டோ பெயரை எடர்னல் என மாற்றுவதற்கு பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜொமேட்டோ, தனது குழும நிறுவனங்களான Blinkit, Hyperpure, District ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கு பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தது. அதற்காக எடர்னல் லிமிடெட் (Eternal Ltd) என புதிய பெயர் சூட்டி ஒப்புதல் பெற்றுள்ளது. எனினும், உணவு டெலிவரி ஜொமேட்டோ பெயரிலேயே இயங்கும்.
பிரபல நடிகரும், இயக்குநருமான ஏ.டி.ரகு (55) உடல்நலக்குறைவால் காலமானார். Sandalwood சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநரான இவர், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் 55 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் அம்பரீஷை வைத்து மட்டும் கன்னடத்தில் 23 படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக, ரஜினிகாந்தை வைத்து இந்தியில் ‘Meri Adalat’ திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம் தொட்ட நிலையில், இன்று (மார்ச் 21) கிராமுக்கு ₹2 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு கிராம் ₹112க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,12,000க்கும் விற்பனையாகிறது. கடந்த 1ஆம் தேதி ஒரு கிராம் ₹105க்கு விற்பனையான வெள்ளி 20 நாள்களில் கிராமுக்கு ₹7 உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
IPL தொடரில் அதிகமுறை ‘ஆரஞ்சு தொப்பி’ வென்ற டேவிட் வார்னர் சாதனையை விராட் கோலி சமன் செய்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2015, 2017, 2019 ஆகிய 3 ஆண்டுகளில் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பி வென்றுள்ளார். அதேநேரம், 2016, 2024ல் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பியை 2 முறை RCB வீரர் விராட் கோலி வென்றுள்ளார். அத்துடன், IPLல் ஒரு தொடரில் அதிக ரன்கள் (973) அடித்த வீரர் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று மளமளவென்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹66,160க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹8,270க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2022 மே முதல் 2024 டிசம்பர் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணித்திருக்கிறார். இதற்காக மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா? ₹259 கோடி. தங்குமிட செலவு மட்டும் ₹104 கோடி. இதர செலவுகளுக்கு ₹75.7 கோடியும், போக்குவரத்துக்கு ₹71.1 கோடியும் செலவாகி இருக்கிறது. நாடுகள் வரிசையில் அமெரிக்க பயணத்திற்கு தான் அதிகமாக ₹38.2 கோடி செலவாகியுள்ளதாம்.
இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக USA அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற அவர், அவர்களுடன் தனக்கு இருக்கும் ஒரே பிரச்னை அதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என்று தான் நம்புவதாக கூறிய அவர், ஏப்.2 முதல் அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை, நாங்களும் அவர்களிடம் வசூலிப்போம் என்றார்.
Sorry, no posts matched your criteria.