India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவை பாஜக கைப்பற்ற துடிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுகவினர் முறையிட்டனர். அதற்கு வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரைக்கு பின் பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். அதிருப்தியடைந்த அதிமுகவினர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது.
பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸில் சிக்கியுள்ளனர். 2014இல் கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது மாணவிகள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர்களை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம் அரங்கேறியது. இந்த வழக்கில் 16 பேருக்கு 2019இல் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ், தமிழரசி தம்பதி வசமாக சிக்கியுள்ளனர்.
சோஷியல் மீடியாக்களில் அதிகம் பின்தொடரப்படும் IPL அணி எது தெரியுமா? நம்ம தல தோனி இருக்கும் சென்னை அணி தான். இன்ஸ்டா, பேஸ்புக், x என்று 3 சோஷியல் மீடியாக்களிலும் CSKவுக்கு மொத்தமாக 42 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். 2வது இடத்தில் ரோஹித் சர்மாவின் மும்பை அணியும், அதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலியின் பெங்களூரு அணியும் இடம் பிடித்திருக்கின்றன. கடைசி இடத்தில் லக்னோ அணி உள்ளது.
தமிழகத்தையே அதிரவைத்த கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு வழக்கில், பிடிபி இயக்கத் தலைவர் மதானிக்கு எதிராக சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கேரளாவை சேர்ந்த முன்னாள் நக்சலைட்டான கடல முகமது(79). போலீஸ் அவரை எவ்வளவு சித்ரவதை செய்தபோதும், பொய்சாட்சி சொல்ல மறுத்து, 9 ஆண்டு சிறைக்கு பின் குற்றமற்றவர் என விடுதலையானார். நேர்மைக்கும், துணிவுக்கும் சமூக செயற்பாட்டாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அவர் காலமானார். RIP!
காங்கிரஸ் MP ராகுல் காந்தி நேரில் ஆஜராக, உ.பி சம்பல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 15ல், காங்கிரஸ் தலைமை அலுவலக திறப்பு விழாவின்போது பாஜகவை மட்டுமின்றி இந்திய அரசையும் எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது என பேசியிருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தொழிலதிபர் கிரிதிஷ் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. நடிகர் விஷால் தங்கையின் கணவரும், நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிதிஷ் வீட்டுக் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ₹2.5 கோடி பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ, மோசடிக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிந்துள்ளது.
யூ டியூப் வீடியோவால் இளைஞரின் உயிர் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உ.பியின் மதுராவை சேர்ந்த 32 வயது ராஜா பாபுவுக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் வலி தீரவில்லை. யூடியூப் பார்த்து சுயமாக ஆப்ரேஷன் செய்து கொள்ள முடிவெடுத்து, வயிற்றை கிழித்தார். அதன்பின் நடந்தது எல்லாம் டிராஜடி தான். தற்போது ஆபத்தானக் கட்டத்தில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2026 பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆளும் திமுகவுக்கு எதிராக சூறாவளி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவரின் பேச்சு மக்கள் மத்தியில் சென்றடைந்து விடக்கூடாது என்ற கணக்கு போட்ட ஆளும் தரப்பு, விஜய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, அவரது பேச்சுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பேசுமாறு கமலுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.
புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 57,327 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அட்டை(Smart Card) அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் 18,09,607 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், 1,67,795 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்றும் கூறினார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் திருவிழா நாளை முதல் தொடங்குகிறது. இதில் கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை கிடைக்கும் தெரியுமா? மொத்தமாக ₹20 கோடி. 2 ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு ₹13 கோடி வழங்கப்படும். 3 மற்றும் 4 ஆம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு முறையே
₹7 கோடி, ₹6.5 கோடி பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.