news

News March 21, 2025

இது தெரியாம வேஃபர்ஸ் சாப்பிடுறீங்களா?

image

சமீபத்துல வேஃபர்ஸ்ல புழு இருந்ததா செய்தி ஒன்று வந்துச்சு. அத நீங்க பாத்தீங்களானு தெரியல. ஆனா பிரச்னை வேஃபர்ஸ்ல புழு இருக்கறது மட்டுமில்ல. அத சாப்படுறதுனால உடலில் பல பிரச்னைகள் வருமாங்க. ஏன்னா அதுல வெறும் சர்க்கரையும், கொழுப்பும் மட்டும்தான் இருக்கு. அதுனால குழந்தைகள் கேட்டுட்டாங்கனு வாங்கி கொடுக்குறத நிறுத்தீக்கோங்க. பாக்கெட் பண்ணி வைக்கிற பொருட்கள கொடுப்பதை தவிர்ப்பதே நல்லது.

News March 21, 2025

ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு ரத்து: HC உத்தரவு

image

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது, முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

News March 21, 2025

ஐபிஎல் களத்தில் அதிக சிக்சர் பறக்கவிட்டது இவர்களே…!

image

பறக்கும் பந்துகள், சிதறடிக்கப்படும் பந்துவீச்சு என பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் தொடர்களில் அதிக சிக்சர்கள் விளாசியவர் கிறிஸ் கெய்ல். யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் அவர், 142 போட்டிகளில் விளையாடி 357 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். 2ம் இடத்தில் 280 சிக்சர்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். கோலி( 272), தோனி( 252), டி வில்லியர்ஸ்( 251) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.

News March 21, 2025

சுக்கிரப் பெயர்ச்சி: ஜாக்பாட் அடிக்கும் 5 ராசிகள்

image

சுக்கிரன் மார்ச் 19-ல் அஸ்தமனமானார். இதனால் அதிக நன்மைகளை பெறவுள்ள ராசிகள்: *மேஷம்: தொழில், வணிகம் சிறக்கும், புதிய வாய்ப்புகள் உண்டு *ரிஷபம்: நின்றுபோன காரியம் கைகூடும், வருமானம் பெருகும் *மிதுனம்: வியாபாரம், நிதி நிலை மேம்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் *சிம்மம்: வேலை, தொழிலில் முன்னேற்றம், பணவரவு உண்டு *கும்பம்: வேகமான முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.

News March 21, 2025

திருட்டு பணத்தை மறைக்க உதவினால் என்ன தண்டனை?

image

கொள்ளையர் தாங்கள் காெள்ளையடித்த பணம், நகையை உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்திருப்பர். இதில் கொள்ளையர் கைதாகும் போது, உதவியவர்களும் போலீசிடம் பிடிபடுவர். இவர்களுக்கும் BNS சட்டத்தில் தண்டனை தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர் அளிக்கும் அசையும், அசையா சொத்துகளை மறைத்து வைப்போருக்கு 3-10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 21, 2025

யார் இந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா?

image

அலகாபாத்தில் 1969-ம் ஆண்டு பிறந்த <<15836861>>யஷ்வந்த் வர்மா<<>>, பி.காம், எல்.எல்.பி படித்து 1992-ல் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2014-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 2 ஆண்டுகளில் நிரந்த நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2021-ல் டெல்லி ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த், சர்ச்சையில் சிக்கி மீண்டும் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News March 21, 2025

பிரதமர் மோடியின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதான்!

image

50 ஆண்டுகளாக குறிப்பிட்ட நாள்களில் உண்ணாவிரதம் இருப்பதே தனது ஆரோக்கியத்திற்கு காரணம் என PM மோடி தெரிவித்துள்ளார். சதுர்மாஸ் காலமான ஜூனில் இருந்து தீபாவளிக்கு பின்பு வரை 4 மாதங்களில் தினமும் ஒருவேளையே உணவு உட்கொள்வாராம். நவராத்திரியில் 9 நாட்களுக்கு உணவின்றி சுடு தண்ணீர் மட்டுமே அருந்துவாராம். அதேபோல், சைத்ரிய நவராத்திரியில் 9 நாள்களும் பழங்கள் மட்டும் சாப்பிடுவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

News March 21, 2025

ஆன்லைன் விளையாட்டால் 47 பேர் தற்கொலை: அரசு

image

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, இளைஞர்களின் நலன்களை கருத்தில் கொண்டே ஆதார் இணைப்பு மற்றும் நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

News March 21, 2025

பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாகும் SEX EDUCATION…!

image

பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு என்பது பலரது கருத்து. இந்த கருத்துக்கு செவிசாய்த்திருக்கிறது கர்நாடக அரசு. அம்மாநில பள்ளிகளில் 8 – 12 வரையிலான வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் தலைமையில் கட்டாய பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News March 21, 2025

ரயில்களில் கீழ் இருக்கை பயணிகளுக்கு சலுகை என்ன?

image

ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் கீழ் இருக்கை பயணிகளுக்கு தனி உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இரவில் அந்த இருக்கையில், சம்பந்தப்பட்ட பயணியை தவிர வேறு யாரும் அமரக் கூடாது. அதேபோல், தேவையில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் கீழ் இருக்கை பயணியை எழுப்புவது, தொந்தரவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

error: Content is protected !!