news

News January 22, 2026

அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

image

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News January 22, 2026

இனி டாக்டர் ரோஹித் சர்மா!

image

மகாராஷ்டிராவின் அஜிங்கியா DY பாட்டீல் பல்கலை., ரோஹித் சர்மாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. கிரிக்கெட்டில் அவரின் ஈடு இணையற்ற பங்களிப்பு & முன்மாதிரியான தலைமைப் பண்பையும் கெளரவிக்கும் விதமாக இந்த பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் யூனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில், ஹிட்மேன் கெளரவிக்கப்படவுள்ளார்.

News January 22, 2026

நான் Anti Muslim- ஆ? மோகன்.ஜி விளக்கம்!

image

’திரௌபதி 2’ டிரெய்லர் பார்த்துவிட்டு Anti Muslim என தன்னை சொல்வதாகவும், ஆனால் இப்படத்தால் இந்து – இஸ்லாமிய சகோதரத்துவம் இன்னும் அதிகமாகும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். மேலும், திரௌபதி படத்தால் தனக்கு பட்டியலின மக்களுக்கு எதிராக படம் எடுக்கிறான் என்ற பெயர் கிடைத்தது என்றும், திரௌபதி 2 படம் பார்த்தபின், இது முஸ்லிம்களுக்காகவே எடுத்திருக்கிறேன் என்பதை மக்கள் உணர்வார்கள் என்றார்.

News January 22, 2026

OFFICIAL: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

image

2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, மோதிரம், வெற்றிக் கோப்பை, விசில் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என கடந்த நவம்பரில் ECI-ல் தவெக விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல், கமலின் மநீமவுக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

செங்கோட்டையன் மீது விஜய் ஏமாற்றமா?

image

செங்கோட்டையன் மூலம் அதிமுகவின் சில EX தலைவர்கள் தவெகவில் இணைந்தாலும், கூட்டணி விவாகரத்தில் விஜய் ஏமாற்றமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக TTV தினகரனை கூட்டணியில் சேர்த்து களம் கண்டால் தென் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை பெற முடியும் என தவெக திட்டமிட்டது. ஆனால், அவர் மீண்டும் NDA-வில் ஐக்கியமாகிவிட்டார். இதனால், கூட்டணி வியூகத்தை மாற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 22, 2026

பிரபல பாடகி ஜானகியின் மகன் காலமானார்

image

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா (65) காலமானார். பரதநாட்டிய கலைஞரான இவர், ’விநாயகுடு’, ‘மல்லேபுவ்வு’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவு எஸ்.ஜானகி உள்பட அவரது குடும்பத்தினரை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்பு சகோதரரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிப்பதாக பாடகி சித்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 22, 2026

மோடிக்கு அடுத்த இடத்தில் கம்பீர்: சசி தரூர்

image

இந்திய அணி தோற்கும் போதெல்லாம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில் கம்பீருக்கு ஆதரவாக சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் மோடிக்கு பின் கடினமான வேலையை செய்பவர் கவுதம் கம்பீர்தான் என்றும், அவரின் திறமையான தலைமைக்கு தனது பாராட்டுக்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த கம்பீர், உண்மை ஒருநாள் அனைவருக்கும் புரியும் என பதிவிட்டுள்ளார்.

News January 22, 2026

FLASH: திமுகவில் இணையும் அமமுக முக்கிய புள்ளிகள்!

image

அமமுக தேர்தல் பிரிவு செயலாளர் மற்றும் தென் மண்டல அமைப்பாளராக உள்ள கடம்பூர் ஜமீன் மாணிக்கராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அவருடன் வாசுதேவநல்லூர் Ex MLA-வும், OPS ஆதரவாளருமான மனோகரனும் திமுகவுக்கு தாவ உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று OPS ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், இன்று <<18922895>>குன்னம் ராமச்சந்திரன்<<>> அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 22, 2026

இந்த தவறை பண்ணிடாதீங்க.. HDFC அவசர எச்சரிக்கை!

image

திடீரென தெரியாத நம்பரில் இருந்து வரும் எந்த ஒரு APK File-ம் டவுன்லோட் செய்ய வேண்டாம் என HDFC வலியுறுத்தியுள்ளது. அது வங்கியின் செயலி போலவே தெரிந்தாலும், இது ஒரு APK Scam என்றும், இதன் மூலம் வங்கியில் உள்ள பணத்தை திருட முடியும் எனவும் HDFC எச்சரித்துள்ளது. மேலும், Playstore அல்லது Appstore-ல் உள்ள வங்கியின் APK தவிர, வேறு எதையும் பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. உஷாரா இருங்க!

News January 22, 2026

உதயநிதி ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக நெருக்கடி

image

சனாதன தர்மம் குறித்த பேச்சு தொடர்பான வழக்கில் நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளான DCM உதயநிதி பதவி விலக வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசு எந்த நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் செயல்படுவது அராஜகமானது எனவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, இதே விவகாரத்தை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என CM ஸ்டாலினுக்கு வலியுறுத்தியிருந்தார்.

error: Content is protected !!