news

News March 19, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 19, 2024

சூர்யகுமார் விளையாடுவதில் சந்தேகம்

image

நடப்பு ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், அதைத் தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்கு சென்றார். அப்போது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் முழுமையாக அவர் தயாராக 3 வாரங்கள் வரை தேவைப்படும் என தெரியவந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 19, 2024

ராஜமெளலிக்கு பரிசு வழங்கிய ஜப்பான் மூதாட்டி

image

ஜப்பானில் திரையிடப்பட்ட ‘RRR’ திரைப்படத்தை பார்த்த மூதாட்டி, இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவிக்கு பரிசு வழங்கி மகிழ்ந்துள்ளார். ராம்சரண், ஜூனியர் NTR நடித்த ‘RRR’ படம் உலக அளவில் ஹிட்டானது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த 85 வயது மூதாட்டிக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போனதால் ராஜமெளலிக்கு அன்புப் பரிசு வழங்கினார். இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் ராஜமெளலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

மோடி கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் தற்போது பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.

News March 19, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News March 19, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுகிறார் ➤ நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவங்குகிறார்.

News March 19, 2024

ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதா?

image

வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

News March 19, 2024

மோடியின் பிடியில் உள்ள தேர்தல் ஆணையம்

image

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

News March 18, 2024

திமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிப்பு?

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. குறிப்பாக அதிமுக வலுவாக உள்ளதாக கூறப்படும் கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் களம் காண்கிறது. எனவே அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 18, 2024

கூட்டமே இல்லாமல் வேனில் செல்வது தான் பேரணியா?

image

மோடி கலந்துகொண்ட சாலை பேரணியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டார். சுமார் 2.5 கிமீ தொலைவுக்கு இந்த வாகனப் பேரணி நடந்தது. இதில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், கூட்டம் இல்லாமல் பிரதமர் ரோடு ஷோ நடத்தியதாக விமர்சித்துள்ளார்

error: Content is protected !!